வீட்டு உரிமையாளர் மீது ஆத்திரம்: இளம் ஜோடி செய்த கொடூரச் செயல்

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் வீட்டு உரிமையாளர் ஒருவரை பழிவாங்க அவரது வீட்டுக்கு தீயிட்டு 5 மாதக் குழந்தையை கொன்ற இருவர் மீது அந்நாட்டு பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எட்மோண்டன் நகரில் உள்ள குடியிருப்பில் 8 பேர் வசித்து வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.

வீட்டில் குடியிருந்த 8 பேரில் தந்தை ஒருவர் 6 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர், ஆனால், அவருடைய மனைவியும் 5 மாதக் குழந்தையும் வீட்டிற்குள் சிக்கியுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

மனைவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தீவிபத்து தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் ‘இந்நிகழ்வு ஒரு திட்டமிட்ட சதி’ என தீர்மானித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியபோது Bronson Woycenko(19) மற்றும் Jessica Tammerand(18) ஆகிய இருவரை பொலிசார் கைது செய்தனர்.

இதுக்குறித்து வீட்டு உரிமையாளர் பேசியபோது, ‘இருவரும் ஏற்கனவே என் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர். வீட்டில் திருடிய குற்றத்திற்காகவும், சேதம் ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் கடந்த பெப்ரவரி மாதம் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டேன்’ என உரிமையாளர் நேற்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இருவர் தான் வீட்டில் தீ வைத்து எனது மகளை கொன்றுள்ளனர்’ என தந்தை உருக்கமாக பேசியுள்ளார்.

இரண்டு பேரையும் சிறையில் அடைத்துள்ள பொலிசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்