அமெரிக்க கல்விச் செயலாளருக்கு ஒன்ராறியோ முதல்வர் அழைப்பு

Report Print Thayalan Thayalan in கனடா
அமெரிக்க கல்விச் செயலாளருக்கு ஒன்ராறியோ முதல்வர் அழைப்பு
0Shares
0Shares
lankasri.com

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கல்விச் செயலாளர் பெட்சி டேவோஸ் ஒன்ராறியோ விஜயத்தை ரத்து செய்துள்ள நிலையில், மாகாண பொதுப் பாடசாலைகளுக்கு அவர் வருகை தரவேண்டும் என்று ஒன்ராறியோ முதலமைச்சர் கத்தலின் வின் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஒன்ராறியோ மாகாண பொதுப் பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த டேவோஸ், நிகழ்ச்சித் திட்டமிடல்களின் குழப்பம் ஏற்பட்டதாக கூறி ஒருநாள் முன்னதாகவே தனது விஜயத்தை ரத்து செய்திருந்தார்.

இந்நிலையில் டேவோஸ், ஒன்ராறியோ விஜயத்தை மீள திட்டமிட்டால் மாகாண பொதுப் பாடசாலைகளுக்கு வருகை தர வேண்டும் என்று கத்தலின் வின் அழைப்பு விடுத்துள்ளார்.

வெளிப்படையாக நிதியளிக்கப்படும் ஒன்ராறியோவின் பொதுக்கல்வி முறையை டேவோஸிற்கு காண்பிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கத்தலின் வின் மேலும் தெரிவிக்கையில், ” அமெரிக்க கல்விச் செயலாளர் டேவோஸ் கடந்த காலங்களில் மேற்கொண்ட பல தீர்மானங்களுடன் நான் உடன்படவில்லை. அது உண்மைதான். ஆனால் எங்களுடைய பாடசாலைகளில் நாம் என்ன செய்கின்றோம் என்பதுடன் கல்வி நடைமுறையை எவ்வாறு வலுவடையச் செய்துள்ளோம் என்பதையும் அவருக்கு காட்டுவதற்கு இது சிறந்த வாய்ப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்