பெண்களுக்கு எதிரான வன்முறை: கனடிய பிரதமர் முக்கிய அறிக்கை

Report Print Raju Raju in கனடா
157Shares
157Shares
lankasrimarket.com

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் சர்வதேச தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

இது சம்மந்தமாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது மனித உரிமைகள் மீறல் ஆகும். நம் சமூகத்தில் உள்ளவர்கள் இது போன்ற வன்முறைகளை அனுபவிக்கும் போது நாம் அனைவரும் இதனால் பாதிக்கப்படுகிறோம்.

பெண்கள் அனைவருக்கும் மரியாதை, பாதுகாப்பு, சுதந்திரம் ஆகியவற்றின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

ஓவ்வொரு ஆணுக்கும் இது குறித்த பொறுப்பு இருக்க வேண்டும்.

பாலின அடிப்படையிலான வன்முறைகளை அகற்றுவதில் ஆண்கள் முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

கனடா மற்றும் உலகில் உள்ள மக்களோடு இணைந்து நமது அரசு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றுவதற்கு அயராது உழைத்து வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்