மொபைல் வீடு தீப்பிடித்ததில் ஒருவர் பலி

Report Print Balamanuvelan in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

Okanagan பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் தீயில் கருகி ஒருவர் பலியானார்.

வியாழனன்று Okanagan பகுதியில் மொபைல் வீடு ஒன்று தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் அந்த வீட்டில் வசித்த ஒருவர் தீயில் கருகி பலியானதாக OK Falls பகுதியின் Fire Captain Peter Maliepaard தெரிவித்தார்.

4505 McLean Creek Roadஇல் அமைந்துள்ள அந்த வீட்டிற்கு அழைப்புகளின் பேரில் தீ அணைப்புப் படையினர் வந்த போது வீட்டைச் சுற்றி தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருப்பதைக் கண்டனர்.

அந்தத் தீயில் அருகிலுள்ள வாகனம் ஒன்றும் எரிந்து நாசமானது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்