அடிபட்டு கிடந்த கனடிய பெண்: செல்பி எடுத்த இளைஞர்

Report Print Deepthi Deepthi in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

இத்தாலியில் பெண்மணி ஒருவர் ரயில் நிலையத்தில் அடிபட்டு காயங்களுடன் போராடிக்கொண்டிருக்கையியில் நபர் ஒருவர் அவர் முன்னால் நின்று செல்பி எடுத்த புகைப்படம் அந்நாட்டின் செய்திகளில் தலைப்பு செய்தியாகி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

கனடாவை சேர்ந்த பெண் Piacenza ரயில்நிலையத்தில் விபத்திற்கு ஆளாகியுள்ளார். ரயில் நிற்கும்போது மாற்றுபாதையில் கதவை திறந்து இறங்கியதால் இவர் அடிபட்டதாக கூறப்படுகிறது.

இதில், காயங்களுடன் அந்த பெண்மணி போராடிக்கொண்டிருக்கையில் நபர் ஒருவர் அவர் முன் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்தார். இந்த புகைப்படம் இத்தாலியில் தலைப்பு செய்தியாக வெளியாக அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து செல்பி எடுத்த நபரை கண்டுபிடித்த பொலிசார், அவர் செய்தது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்றாலும் அவரது செல்பேயில் இருந்த அந்த புகைப்படத்தை முற்றிலும் நீக்கியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்