விண்டோஸ் விஸ்டா இயங்குதளம் பாவிப்பவரா? இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்!

Report Print Givitharan Givitharan in கணணி
0Shares
0Shares
lankasrimarket.com

கணினிகளுக்கான முன்னணி இயங்குதளமாக விண்டோஸ் காணப்படுகின்றது.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்த விண்டோஸ் இயங்குதளமானது பல பதிப்புக்களாக வெளிவந்திருந்தமை தெரிந்ததே.

இவற்றில் வழமையான இயங்குதள இடைமுகத்திலிருந்து சற்று வித்தியாசமான இடைமுகத்தினைக் கொண்ட இயங்குதளத்தினை 2007ம் ஆண்டு காலப் பகுதியில் மைக்ரோசொப்ட் அறிமுகம் செய்திருந்தது.

விண்டோஸ் விஸ்டா எனும் குறித்த இயங்குதள பதிப்பானது உலக அளவில் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று இன்று வரையிலும் பாவனையில் உள்ளது.

இதற்கான அனைத்துவிதமான சப்போர்ட்டினை மைக்ரொசொப்ட் நிறுவனம் தொடர்ந்தும் வழங்கி வந்தது.

எனினும் நேற்றைய தினம் முதல் இப் பதிப்புக்கான அனைத்துவிதமான சப்போர்ட்களையும் அதிரடியாக அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் இவ் இயங்குதளத்தினை பாவிப்பது பாதுகாப்பு அற்றதாகவும், மென்பொருட்களுக்கான அப்டேட்கள் கிடைக்காமலும் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விண்டோஸ் 10 இயங்குதளமே அதிகளவில் பாவனையில் உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments