இந்திய அணியிடமிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும்: இலங்கை பயிற்சியாளர் ஆதங்கம்

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய அணியிடமிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும் என அந்த அணியின் இடைக்கால பயிற்சியாளர் நிக் போத்தாஸ் கூறியுள்ளார்.

இலங்கைக்கு சென்று விளையாடிய இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி என அனைத்தையும் முழுவதுமாக கைப்பற்றி சாதனை படைத்தது.

தோல்விக்கு பின்னர் பேசிய இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளர் நிக் போத்தாஸ், இந்திய அணி உலகின் சிறந்த ரக்பி அணியான ஆல்-பிளாக்ஸ் போல உள்ளது.

எதிரணிக்கு துளியும் பிடிகொடுக்காமல் கருணையற்ற வகையில் விளையாடும் அவர்களின் கட்டுக்கோப்பு அபாரமானது.

இலங்கை அணியினர் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதை விட முக்கியம், இந்திய அணியிடம் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு தலைவராக விராட் கோஹ்லிக்கு களத்தில் கிடைக்கும் மரியாதையை பார்க்கும் போதும் அவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.

இந்திய அணி செயல்படும் விதம், கடைபிடிக்கும் அணுகுமுறைகள் என எல்லாமே ஈர்க்கிறது என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்