முச்சதம் தொட்டுவிடும் தூரந்தான்: மும்பை டான் விளக்கம்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
358Shares
358Shares
lankasrimarket.com

மூன்று முறை இரட்டை சதம் அடித்து அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் முச்சதம் அடிப்பது எளிதான ஒன்றுதான் என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா அணித்தலைவராக பொறுப்பேற்று இலங்கை எதிராக விளையாடிய ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

இதன்மூலம் மூன்று முறை இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தற்போது இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இந்நிலையில் முச்சதம் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, முச்சதம் அடிப்பது சாத்தியமானதுதான். ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கும்போது அவருக்கு 50 ஓவர்கள் உள்ளது.

சதம் விளாசிய பின் எந்த தவறும் செய்யாமல் விளையாடினால் அனைத்தும் சாத்தியமே. பிட்ச் மற்றும் அந்த நாள் நமக்கானதாக அமையும்போது எல்லாமே சாத்தியம்.

264 ஓட்டங்களுக்கு 300க்கும் வெறும் 36 ஓட்டங்கள்தான் வித்தியாசம். இதனால் முச்சதம் சாத்தியமான ஒன்றுதான்.

சதம் விளாசிய பின் பந்துவீச்சாளர்கள் உங்களை குறிவைத்து ஆடுவார்கள். அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் அவர்கள் செயல்படுவார்கள். அப்போது ஏதாவது தவறு செய்தால் நடையை கட்ட வேண்டியதுதான் என்றார் ரோகித்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்