மழையால் ரத்தான இங்கிலாந்து- இந்தியா முதல் நாள் ஆட்டம்: டிக்கெட் பணத்தை திருப்பி வழங்கும் லார்ட்ஸ் மைதானம்

Report Print Kabilan in கிரிக்கெட்
58Shares
58Shares
lankasrimarket.com

இங்கிலாந்து- இந்தியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால், டிக்கெட்டிற்கான முழு தொகையையும் லார்ட்ஸ் மைதானம் திருப்பி வழங்குகிறது.

லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால், ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் டிக்கெட்டிற்கான முழுத் தொகையையும் வழங்க லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் லார்ட்ஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த 2001ஆம் ஆண்டு பாகிஸ்தான்- இங்கிலாந்து விளையாடிய டெஸ்டின்போது, மழைக் காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர், தற்போது தான் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டமும் தடைப்பட்ட நிலையில் இந்திய அணி துடுப்பாட்டம் செய்து வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்