முல்லைத்தீவில் இடம்பெற்ற புலமைப்பரிசில் வெற்றியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Report Print Yathu in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு - விசுவமடு விசுவநாதர் ஆரம்பப் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்த நிகழ்வு நேற்று முன்தினம் காலை 09.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் கலந்து கொண்டார்.

பண்பாட்டு நிகழ்வுகளுடன் தொடங்கிய இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள், விருந்தினர்களது உரைகள் ஆகியவற்றுடன் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

புலமைப்பரிசில் பரீட்சையில் நூறு புள்ளிகளை பெற்றவர்களும், வெட்டுப்புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் இதன் போது பரிசில்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக, வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், புவனேஸ்வரன் மற்றும் வன்னிப் பிராந்திய மக்கள் வங்கி முகாமையாளர் சிவா சிவக்கொழுந்து உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்