சத்தமின்றி 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்த நடிகர் விஜய்: யாருக்கு தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasri.com

எந்த விளம்பரமின்றி திரைப்பட நடிகரான நடிகர் விஜய் நடனகலைஞர்கள் சங்கத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில், வெளியான படம் மெர்சல். இந்தப் படத்தில் ஜிஎஸ்டி குறித்தும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விமர்சன வசனங்கள் இடம் பெற்றிருந்தன.

இதற்கு தமிழக பாஜக தலைவர்கள் பலரும் எதிர் கருத்து தெரிவிக்க, அதன்மூலம் படத்திற்கு பெரும் விளம்பரம் ஏற்பட்டு படம் வசூலைக் குவித்தது.

இந்நிலையில் மெர்சல் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விஜய் தென்னிந்திய நடனக்கலைஞர்கள் சங்கத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். விஜய் வழங்கிய இந்த நிதித்தொகை, நடனக்கலைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்