நடிகை ஸ்ரீரெட்டிக்கு எதிராகப் போராட்டம்: விஷால் பட நடிகை கைது!

Report Print Kabilan in பொழுதுபோக்கு
53Shares
53Shares
lankasrimarket.com

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகை மாதவி லதா கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பு குற்றாச்சாட்டை முன் வைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அரைநிர்வாணப் போராட்டம் நடத்திய ஸ்ரீரெட்டி, இயக்குனர் சேகர் கமுலா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம் டகுபதி, இயக்குனர் கொரட்டலா சிவா, நடிகை ஜீவிதா ஆகியோர் மீதும் பாலியல் புகார் கூறினார்.

இந்நிலையில், தாங்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக துணை நடிகைகள் சிலர், நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.

அப்போது ஸ்ரீரெட்டி கூறுகையில், ‘நடிகர் பவன் கல்யாண், பாலியல் புகார் பிரச்சனையை பொதுவெளியில் சொல்வதை விட்டுவிட்டு, பொலிசில் புகார் கொடுக்கச் சொல்லலாம் என்கிறார். அவருக்கு நன்றி.

அவரை அண்ணனாக நினைத்தேன். அதற்காக என்னை நானே காலணியால் அடித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்ததுடன் தன்னை தானே காலணியால் அடித்துக் கொண்டார்.

இது பவன் கல்யாண் ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு நடிகை மாதவி லதா,( விஷாலின் ‘ஆம்பள’ படத்தில் நடித்தவர்) பவன் கல்யாணை எப்படி குறை கூறலாம் எனக் கூறி, பிலிம்சேம்பர் முன்பு ஸ்ரீரெட்டிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த பொலிசார் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மாதவி லதா உட்பட அனைவரையும் கைது செய்தனர்.

பின்னர், இதுகுறித்து மாதவி லதா கூறுகையில், ‘முதன் முறையாக காவல் நிலையம் சென்றேன். அங்கு சிறையில் இருந்தது வித்தியாசமாக இருந்தது. ஒரு Call செய்துகொள்ளக் கூட பொலிசார் அனுமதிக்கவில்லை. இருந்தாலும் சிறையில் இருந்ததில் மகிழ்ச்சி தான்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்