தினம் 1 டம்ளர் தக்காளி சாறு: இந்த மாற்றம் நிச்சயம் நடக்கும்

Report Print Printha in உணவு
0Shares
0Shares
lankasrimarket.com

தக்காளி சாற்றில் விட்டமின் A, C , சல்பர், குளோரின் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

அதனால் இந்த தக்காளி சாற்றை தினசரி ஒரு டம்ளர் குடித்து வருவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

தக்காளி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்?
  • தக்காளி பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், ரத்தம் மற்றும் உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • தக்காளியில் உள்ள சல்பர் மற்றும் குளோரின் கல்லீரல், சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஊக்குவித்து, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.
  • தக்காளி பழச்சாறு நம் உடலிற்கு போதுமான ஈரப்பதத்தை அளித்து, செரிமான குழாயில் உணவுகள் சிக்குவதை தடுத்து, செரிமானத்தை சீராக்க உதவுகிறது.
  • தக்காளியில் உள்ள விட்டமின் B6 ஊட்டச்சத்து, இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, இதயம் தொடர்பான நோயினை ஏற்படுத்தும் ஹோமோசைஸ்டீன் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
  • தோலின் மேற்புறத்தில் ஏற்படும் பருக்கள், வீக்கங்கள் போன்ற தோல் தொடர்பான நோய்களை தடுப்பதுடன், சருமத்தின் துளைகள் வழியாக தூசுக்கள் நுழைவதையும் தடுக்கிறது.
  • நுரையீரல், மார்பகம், குடல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. எனவே தினமும் ஒரு டம்ளர் தக்காளி சாறு எடுத்து குடிப்பது நல்லது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments