கடந்த 60 ஆண்டுகளை விட இந்தாண்டு பின்தங்க போகும் பிரான்ஸ்: எதில் தெரியுமா?

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
Promotion

மோசமான வானிலை காரணமாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு பிரான்ஸில் வைன் (Wine) உற்பத்தி குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் வைன் மதுவகை பானத்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக பிரான்ஸ் விளங்கி வருகிறது.

ஆனால் அந்த நிலை இந்த வருடம் மாறவுள்ளது, இதுகுறித்து பிரான்ஸ் வேளாண் அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், வைன் உற்பத்தி இந்த வருடம் 19 சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

கடைசியாக இதுபோன்ற நிலை 1957-ல் ஏற்பட்ட நிலையில், 60 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அரங்கேற வாய்ப்புள்ளது.

இதற்கு காரணம் மோசமான வானிலை தான். வைன் அதிக உற்பத்தியாகும் Bordeaux பகுதியில் அதிக பனி பொழிகிறது.

இதற்காக நெருப்புகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் முயன்றும் அந்தளவு பலன் தரவில்லை.

அதே போல Champagne பகுதியில் ஏற்பட்ட கோடை புயல் காரணமாக அங்கு வளரும் திராட்சை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வைன் தயாரிப்பாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வைன் தயாரிப்பில் பிரான்ஸ்க்கு, இத்தாலி போட்டி நாடாக உள்ள நிலையில், இந்த வருடம் அந்நாடு 47.2 மில்லியன் ஹெக்டோ லிட்டர் அளவும், பிரான்ஸ் 36.9 மில்லியன் ஹெக்டோ லிட்டர் அளவும் வைன் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்