500 கிலோ யானை தந்தங்களை அழித்த பிரான்ஸ்: காரணம் இதுதான்

Report Print Kabilan in பிரான்ஸ்
417Shares
417Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 500 கிலோவுக்கும் அதிகமான யானை தந்தங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸில் கடந்த 2016ஆம் ஆண்டு யானை தந்தங்கள் மற்றும் காண்டாமிருகங்களின் கொம்புகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தெற்கு பிரான்ஸில் உள்ள நைஸ் நகரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 563 கிலோ எடை கொண்ட யானை தந்தங்கள் அழிக்கப்பட்டதாக, சர்வதேச விலங்குகள் நல நிதியாணையம் அறிவித்துள்ளது.

பொதுவாக இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் தந்தங்களை அதிகாரிகள் ஏலத்தில் விடுவார்கள் அல்லது ஒன்லைனில் விற்று விடுவார்கள். ஆனால், தற்போது கைப்பற்றப்பட்ட 563 தந்தங்களில் 100 தந்தங்கள் சேதமடைந்தவை ஆகும்.

மேலும், பொதுமக்களிடம் யானை தந்தம் குறித்த பிரச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த தந்தங்களை அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, நைஸ் நகரின் உயர் அதிகாரி Francoise Taheri கூறுகையில், ‘இதன் மூலம் உலகளவில் விலங்குகளை அழித்து வர்த்தகம் செய்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

கடந்த 1989ஆம் ஆண்டில் இருந்து தந்தங்களை விற்பனை செய்வதற்கு உலகளவில் தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்