டிரம்பின் கையை பிரான்ஸ் ஜனாதிபதி அழுத்தி பிடித்ததால் என்ன ஆனது? வெளியான புகைப்படம்

Report Print Santhan in பிரான்ஸ்
626Shares
626Shares
lankasrimarket.com

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கையை பிரான்ஸ் ஜனாதிபதி அழுத்தி பிடித்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

கியூபெக் நகரில் நடைபெற்ற இந்த மாநாட்டின் போது, டிரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர்.

அப்போது மேக்ரான், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், டிரம்பின் கையை அழுத்தமாக பிடித்தபடி கைகுலுக்கிய வண்ணம் இருந்தார்.

இதன் காரணமாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் கட்டை விரல் தடம், அமெரிக்க ஜனாதிபதியின் கையில் பதிந்தது.

இதைக் கண்ட இணையவாசிகள் உடனடியாக அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்