அவசர அழைப்பை நிராகரித்த பொலிஸ்: ரூ.10 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனி நாட்டில் வாலிபர் ஒருவர் உதவிக்கு பொலிசாரை அழைத்தபோது அதனை நிராகரித்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் பவேரியா நகரை சேர்ந்த 17 வயதான வாலிபர் ஒருவர் பொலிசாரின் அவசர எண்ணை தொடர்புக்கொண்டுள்ளார்.

‘வாலிபர்கள் சிலர் தன்னை தாக்குவதாகவும், பொலிசாரை உதவிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு’ அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால், வாலிபரின் தொலைப்பேசி அழைப்பை எடுத்த 53 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் வாலிபரை கடுமையாக சாடியுள்ளார்.

‘வாலிபர்கள் நீங்கள் அடிக்கடி சண்டை போடுவீர்கள். எல்லா நேரங்களையும் பொலிசாரை உதவிக்கு அனுப்ப முடியாது’ எனக் கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.

மேலும், பொலிசாரை உதவிக்கு அவர் அனுப்பாத காரணத்தினால் வாலிபர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கடமையை செய்ய தவறிய பொலிஸ் அதிகாரி மீது விசாரணை நடைபெற்றது.

இவ்வழக்கு நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, ‘பொதுமக்கள் உதவிக்கு அழைக்கும்போது உடனடியாக செல்ல வேண்டியது பொலிசாரின் கடமை.

ஆனால், வாலிபரின் அவசர அழைப்பை பொலிஸ் அதிகாரி நிராகரித்தது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.

எனவே, பொலிஸ் அதிகாரிக்கு 6,000 யூரோ(9,64,205 இலங்கை ரூபாய்) அபராதம் விதிப்பதாக நீதிபதி அதிரடியாக தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments