குடிபெயர்பவர்களாலேயே வன்முறை குற்றங்கள் அதிகரிப்பு: ஜேர்மன் அறிக்கையில் தகவல்

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

அகதிகளும், குடிபெயர்பவர்களும் சில ஆண்டுகளாக ஜேர்மனிக்குள் அதிகளவில் நுழைவதே வன்முறை குற்றங்கள் அதிகரிக்க காரணம் என ஜேர்மனி அரசு வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் சிரியா, ஈராக்கிலிருந்து வரும் அகதிகள் அதிகளவில் வன்முறையில் ஈடுபடுவதில்லை எனவும் தெரியவந்துள்ளது.

கடந்த 2014-லிருந்து 2016 காலக்கட்டத்துக்குள் வன்முறை குற்றங்கள் நாட்டின் லோயர் சக்சோனி மாகாணத்தில் 10.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

2015-ல் ஜேர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல் அதிகளவில் அகதிகளை நாட்டுக்குள் அனுமதித்ததே இதற்கெல்லாம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

குற்றச்செயல்களுக்கு 92 சதவீதம் புகலிடம் கோரியவர்களே பொறுப்பாக உள்ளனர், அதிலும் நிரந்தர புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளும் இதில் முக்கிய காரணமாக உள்ளார்கள்.

முக்கியமாக மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா போன்ற நாட்டு மக்களுக்கு ஜேர்மனியில் நிரந்தர புகலிடம் அதிகமாக மறுக்கப்பட்டுள்ளது.

லோயர் சக்சோனி முன்னாள் பிராந்திய உள்துறை அமைச்சர் பிரிப்பர் கூறுகையில், புகலிடம் மறுக்கப்பட்டவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்ப ஜேர்மனி அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும்,

அவர்களை நாடு கடத்தினால் மட்டும் போதாது, அகதிகள் கொள்கையில் புதிய கோட்டுபாடுகளை விதிக்க வேண்டும்.

புகலிடம் கோருபவர்களில் பெரும்பாலானோர் 14லிருந்து 30 வயது கொண்ட இளைஞர்கள் என்பதே வன்முறைக்கு முக்கிய காரணம் என பிரிப்பர் கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்