ஐரோப்பிய யூனியனில் அதிக முதலீடு செய்திடுங்கள்: ஜேர்மனியை வலியுறுத்தும் பிரான்ஸ்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares
0Shares
Cineulagam.com

ஐரோப்பாவின் வளர்ச்சிக்காக அதிக முதலீடுகளைச் செய்யுமாறு ஜேர்மனியை பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரான்சின் நிதியமைச்சர் Bruno Le Maire கூறுகையில், பொதுச் செலவுகளைக் குறைத்து பொருளாதாரத்தை மறு சீரமைத்ததன்மூலம் பிரான்ஸ், ஐரோப்பிய வளர்ச்சிக்கான தனது பங்கை ஏற்கனவே அளித்துவிட்டது.

இதேபோன்று ஜேர்மனியும் முறையான சம்பளக் கொள்கைகளை மேற்கொண்டு அதிக முதலீடுகளைச் செய்வதன்மூலம் ஐரோப்பிய வளர்ச்சிக்கான தன் பங்கை அளிக்கும் என தான் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

மேலும் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பில் ஜேர்மனி ஏற்கனவே சரியான பாதையில் சிறந்த முடிவை எடுத்துள்ளது, இதேபோன்று புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பெரிய திட்டங்களில் முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜேர்மன் சான்சலர் Angela Merkel ஒரு புதிய கூட்டணி அரசை அமைக்கப் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் Le Maireஇன் இந்த அழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்