பற்களில் ஏற்படும் கோளாறுகளை தடுக்கும் மருந்தினை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்!

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

பற்களில் உபாதைகள் ஏற்படும்போது பொதுவாக குறித்த பற்களை பிடிங்கிவிடுவார்கள்.

அல்லாவிடில் பற்களில் ஏற்படும் குழிகளை செயற்கை முறையில் அடைத்து சரிசெய்துவிடுவார்கள்.

ஆனால் இப்போது இவற்றிற்கு அவசியம் ஏற்படாத வகையில் மாத்திரை ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

எனினும் இம் மாத்திரையானது அல்ஸைமர் நோய் தாக்கம் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவது தொடர்பில் மருத்துவப் பரிசோதனையில் உள்ளது.

இம் மாத்திரையே பற்கேளாறுக்கும் பயனுள்ளது என தற்போது லண்டனிலுள்ள கிங்ஸ் காலேஜ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இம் மாத்திரையானது சிதைவடைந்த பற்கள் மீண்டும் புதுப்பிக்கப்படுவதற்கு உறுதுணையாக இருப்பதுடன், செயற்கையான முறையில் பற்குழிகளை அடைக்கும் அவசியம் அற்றதாகவும் மாற்றிவிடுகின்றது.

குறித்த மாத்திரையில் காணப்படும் Tideglusib எனும் பதார்த்தம் பற்களிலுள்ள ஸ்டெம் செல்களை புதுப்பிப்பதன் ஊடாகவே பற்களில் ஏற்படக்கூடிய மேற்கண்ட கோளாறுகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments