உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுப்பொருட்கள்

Report Print Raju Raju in ஆரோக்கியம்
637Shares
637Shares
lankasrimarket.com

இன்றைய பாஸ்ட்புட் யுகத்தில் எது ஆரோக்கியம் தரும் உணவு, எது கேடு விளைவிக்கும் உணவு என நாம் பார்ப்பதில்லை.

வயிற்றை நிரப்ப ஏதோ ஒரு உணவை உண்கிறோம், பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதிகரிப்பால் நமது பாரம்பரிய உணவுகள் அழிந்து வருகிறது.

சிலமுக்கிய உணவு பொருட்களை நாம் உண்ணும் உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

மஞ்சள்

பல ஆயிரம் வருடங்களாக சமையலுக்கு பயன்ப்படும் மஞ்சள் மனித உடலுக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது.

கீல்வாதம், பெருங்குடல் புண், செரிமான கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு மஞ்சள் வரப்பிரசாதமாகும்.

பூண்டு

இதய நோய் வராமல் தடுக்கும் பூண்டு, ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்கிறது. ஆய்வக பரிசோதனையில் பூண்டுக்கு புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் உண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது.

பூண்டு அதிகம் உண்பவர்களுக்கு பெருங்குடல் மற்றும் உணவுக்குழாயில் புற்று நோய் வருவது குறைவாக காணப்படுகிறது.

இஞ்சி

மலச்சிக்கல் மற்றும் கர்ப்ப கால குமட்டலுக்கு இஞ்சி சிறந்த மருந்தாகும். அதே போல கீல்வாதம் உள்ளவர்கள் இஞ்சியை பயன்படுத்தும் போது அவர்கள் வலி குறைவதாக ஆய்வுகள் கூறுகிறது.

வெந்தயம்

நெஞ்செரிச்சலின் குறியீடுகளை சீராக்கும் வெந்தயம், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகிறது. வெந்தயம் இதய நோய்களை உண்டாக்கும் கொழுப்பு அமிலங்களை குறைக்க உதவுகிறது.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும், இதை சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறைகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்