கட்டிய மூன்று மனைவிகளும் பிரிந்து சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

மனைவிகள் பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவர், தான் விஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில் தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (45). இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் பூங்கொடி என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார்.

இந்நிலையில் நூர்ஜகான் என்ற பெண்ணை சாதிக் இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு பர்வீன்பானு (11) நசீர்பாஷா (9) என்ற குழந்தைகள் உள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட சண்டையால் நூர்ஜகான் அவரை பிரிந்து சென்றுவிட்டார்.

இதையடுத்து ஷாபிதா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்த சாதிக்குக்கு கமால் பாஷா (7) என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஷாபிதாவும் கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் மனம் உடைந்த சாதிக் தனது மூன்று குழந்தைகளுக்கும் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார்.

இதையடுத்து நால்வரும் மயங்கியுள்ளனர். அப்போது அக்கம்பக்கத்தினர் சிலர் வந்து சாதிக் வீட்டு கதவை திறந்து பார்த்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போகும் வழியிலேயே சாதிக் உயிரிழந்து விட, ஆபத்தான நிலையில் மூன்று குழந்தைகளும் சிகிச்சை பெறுகிறார்கள்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்