சுட்டு வீழ்த்தப்பட்ட சவுதி போர் விமானம்: மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com

ஏமன் நாட்டின் சாதா மாகாணத்தில் சவுதிக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், ஹூதி போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாதா மாகாணத்தில் சவுதி போர் விமானம் ஒன்று இன்று மாலை உல்ளூர் நேரப்படி விபத்துக்குள்ளானது.

ஆனால் ஏமனில் உள்ள ஹூதி போராளிகளின் அதிகாரபூர்வ ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் எற்பட்டுள்ளது.

சவுதி போர் விமானத்தை தங்கள் போராளிகளே சுட்டு வீழ்த்தியதாக ஹூதி போராளிகள் குழு அறிவித்துள்ளது.

ஆனால் இத்தகவலை மறுத்துள்ள சவுதி அரேபியா, போர் விமானம் விபத்துக்குள்ளானதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி விபத்தில் சிக்கிய விமானத்தின் விமானிகளை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இரண்டு விமானிகளும் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஹூதி போராளிகளால் குறித்த போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மையானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹூதி போராளிகள் ஏமன் எல்லையில் இருந்து சமீப நாட்களாக சவுதி அரேபியாவின் முக்கிய தளங்கள் குறிவைத்து ஏவுகணை வீசி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்