ஐபோன் தொலைந்து விட்டதா? ஈஸியா கண்டுபிடிக்கலாம்

Report Print Kavitha in மொபைல்
0Shares
0Shares
Cineulagam.com

ஐபோனை பொருத்தவரையில் தொலைந்துவிட்டால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அனைத்து ஐபோன்களிலும் 'Find My Phone' என்ற செயலியுடன் தான் ஐபோன் அல்லது ஐபேட் வெளியாகிறது.

இதன் மூலம் தொலைந்த அல்லது திருடுபோன ஐபோனை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

ஸ்டெப் 1:

முதலில் மற்றொரு ஐஒஎஸ் உபகரணத்தில் இருந்து Find My Phone செயலிக்கு செல்லுங்கள்.

ஸ்டெப் 2:

அதில் உங்களது ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து எப்போதும் போல் Login செய்யுங்கள்.

ஸ்டெப் 3:

இப்போது உங்கள் ஐபோன் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது போன்ற ஒரு Option வரும்.

ஸ்டெப் 4:

இந்த Step-ல் உங்களது ஃபைண்ட் மை ஐபோன் செயலியில் உங்கள் போன் கடைசியாக இருந்த Location எது என்ற ஆப்சன் வரும்.

ஸ்டெப் 5:

இப்போது நீங்கள் தொலைந்த போனின் Location-னை தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டெப் 6:

ஐபோன் மாடல் மற்றும் ஐஒஎஸ் வெர்சனை குறிப்பிட்டு தொலைந்த போனில் உள்ள டேட்டாக்களை நீங்கள் அழித்துவிடலாம். இதனால் உங்கள் டேட்டாக்களை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்

iCloud மூலம் கண்டுபிடிப்பது எப்படி?
ஸ்டெப் 1:

கம்ப்யூட்டரில் iCloud.com சென்று அதில் உங்களது ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பதிவு செய்து Login செய்யுங்கள்

ஸ்டெப் 2:

இப்போது Find iPhone என்ற ஆப்சனை க்ளிக் செய்து அது தேடும் வரை காத்திருங்கள்.

ஸ்டெப் 3:

பச்சை புள்ளி ஒன்றின் மூலம் தொலைந்த ஐபோன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளலாம். ஐபோன் இருக்கும் இடத்தை தெளிவாக பார்க்க வேண்டும் என்றால் அதை Zoom செய்து கொள்ளலாம்.

ஸ்டெப் 4:

இந்த ஸ்டெப்பில் நீங்கள் தொலைந்த போனில் இருந்து சத்தத்தை வரவழைக்கலாம். ஒருவேளை உங்கள் வீட்டிலேயே எங்காவது மறந்து வைத்திருந்தால் அந்த சத்தத்தை கேட்டு கண்டுபிடித்துவிடலாம். ஒருவேளை திருடு போயிருந்தால் உடனே உங்களது டேட்டாவை அழித்துவிடலாம்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்