பிரித்தானியாவில் அறிமுகமாகும் புதிய 1 பவுண்ட் நாணயம்: என்ன சிறப்புகள் தெரியுமா?

Report Print Peterson Peterson in பணம்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய நாட்டில் எதிர்வரும் மார்ச் 28-ம் திகதி புதிய 1 பவுண்ட் நாணயம் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியா நாடு முழுவதும் தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய 1 பவுண்ட் தாள் மற்றும் நாணயத்திற்கு பதிலாக புதிய நாணயம் வெளியிடப்படுகிறது.

தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய 1 பவுண்ட் தாள் மற்றும் நாணயம் கடந்த 1983-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் தற்போது புதிய 1 பவுண்ட் நாணயம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தற்போது பிரித்தானியா மற்றும் வெளிநாடுகளில் சுமார் 2.2 பில்லியன் 1 பவுண்ட் தாள் மற்றும் நாணயம் புழக்கத்தில் உள்ளது. இவற்றில் சுமார் 45 மில்லியன் போலி நாணயங்கள் ஆகும்.

எதிர்வரும் மார்ச் 28-ம் திகதி அறிமுகமாக உள்ள நாணயம் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உடையதால் இவற்றை போலியாக தயாரிப்பது கடினம்.

புதிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பழைய 1 பவுண்ட் நாணயங்கள் மற்றும் தாள்களை எளிதில் மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, உள்ளூரில் உள்ள தபால் நிலையங்களில் பழைய பவுண்ட்களை செலுத்தி புதிய பவுண்ட்களை பெற்றுக்கொள்ளலாம்.

மற்றொரு வழியாக, உள்ளூரில் இருக்கும் வாடிக்கையாளர்களின் வங்கி கிளைகளிலும் புதிய நாணயங்களை பெற்றுக்கொள்ளலாம். இதனை எதிர்வரும் அக்டோபர் 15-ம் திகதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த திகதிக்கு பின்னர் ஒரு சில வங்கிகள் பழைய பவுண்ட்களை பெற்றுக்கொண்டாலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments