அமெரிக்கா- வடகொரியா பதற்றம்: அண்டை நாடுகள் யாருக்கு ஆதரவு?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
430Shares
430Shares
lankasrimarket.com

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் அண்டை நாடுகளின் ஆதரவு எந்த நாட்டுக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் இடையே வார்த்தைப் போர் கடினமடைந்துள்ள நிலையில்,

இரு நாடுகளுக்கும் இடையே ஆயுதப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என சீனா அஞ்சுகிறது. மட்டுமின்றி வட கொரியாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை சாதாரணமானதாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேடு எச்சரித்துள்ளது.

மேலும் கொரிய தீபகற்பத்தில், அமெரிக்காவும் தென் கொரியாவும் தங்கள் ராணுவ பயிற்சிகளை நிறுத்தி வைப்பதற்குப் பதிலாக,

வடகொரியா தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனையை நிறுத்த வேண்டும் என்ற இரட்டை ஒப்பந்தத்திற்கு இரு நாடுகளும் உடன்படுமாறு சீனா வலியுறுத்தியுள்ளது.

மட்டுமின்றி குறித்த ஒப்பந்தமானது வடகொரியாவை சமாதானப்படுத்த முடியாது என்றாலும் நிறுத்தத்திற்கான ஆரம்பப் புள்ளியாக அமைய வாய்ப்பு உள்ளதாக சீனா நாளேடு குறிப்பிட்டுள்ளது.

குவாம் தீவை வடகொரியா தாக்கும் எனில் அதற்கு மெரிக்காவே முழுப் பொறுப்பு என ரஷ்ய ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றன.

தென்கொரியாவிலும் பதற்றமான சூழலே காணப்படுகிறது. ஒரு சிறிய தப்புக்கணக்கு கூட, திட்டமிடப்படாத தாக்குதல்கள் நடப்பதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தும் என ஒரு பிரபல தென் கொரிய நாளிதழ் கூறியுள்ளது.

அமெரிக்கா வட கொரியா மீது தாக்குதல் நடத்தினால், வட கொரியாவிற்கு எதிரான போரில் அவுஸ்திரேலியாவும் பங்குபெறும் என அந்நாட்டு பிரதமர் மால்கம் ட்ர்ன்புல் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்