கோஹ்லி-பும்ராவை விட குறைவாக சம்பளம் வாங்கும் டோனி: எத்தனை கோடி தெரியுமா?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasri.com

கோஹ்லி மற்றும் பும்ராவை விட இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி 2 கோடி ரூபாய் சம்பளம் குறைவாக பெறவுள்ளார்.

பிசிசிஐ இந்திய அணி வீரர்களின் பட்டியலையும், வீரர்களுக்கான கிரேட் மற்றும் சம்பளங்கள் குறித்தும் அறிவித்துள்ளது. புதிதாக A+ என்ற கிரேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை A, B, C என 3 பிரிவுகள் மட்டுமே இருந்தது, தற்போது A+ கிரேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பள பட்டியளானது அக்டோபர் மாதம் 2017 முதல் செப்டம்பர் 2018 வரையிலானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த கிரேடில் ஐந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன், புவனேஷ் குமார், பும்ரா ஆகியோர் A+ கிரேட் அந்தஸ்துடன் 7 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளனர்.

அதே போல் A பிரிவில் டோனி, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, முரளி விஜய், புஜாரா, அஜிங்க்ய ரஹானே, விருதிமான் சாஹா ஆகிய ஏழு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு 5 கோடி ரூபாய சம்பளம் அளிக்கப்படும்.

டோனி, அஸ்வின், புஜாரா உள்ளிட்ட வீரர்கள் A பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் பும்ராவை விட டோனி 2 கோடி சம்பளம் குறைவாக பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்