காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை மீது கற்கள் வீசி தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

Report Print Athavan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasri.com

காமன்வெல்த் விளையாட்டில் அண்மையில் தங்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை பூனம்யாதவ், சொந்த ஊரில் மர்ம நபர்களால் கற்கள் வீசி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவுஸ்திராலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், பளுதூக்குதலில் தங்கம் வென்றவர் பூனம் யாதவ். இவர் வாரணாசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவரது உறவினருக்கும் பக்கத்து ஊர் தலைவருக்கும் உள்ள சொத்து பிரச்சனை விஷயமாக அவரிடம் பேச சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் பூனம் கற்களால் தாக்கப்பட்டார்.

இதில் பூனம்க்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சமரச பேச்சில் ஈடுபட முயன்ற பூனமின் தந்தை, மாமா மற்றும் உறவுக்காரர் ஒருவரும் இந்த சம்பவத்தில் தாக்கப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார்.

அவர்கள் உடனடியாக அங்கு வந்து கற்கள் வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களிடம் இருந்து பூனம் யாதவை மீட்டு அழைத்து சென்றனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ள குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என போலீஸ் சூப்பிரெண்டு அமித் கூறினார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்