ஒன்லைன் ஊடாக பாடல்களை கேட்டு மகிழும் வசதியினை ஆப்பிள் மியூசிக் சேவை வழங்கி வருகின்றது.
மிகவும் பிரபல்யம் மிக்க இச் சேவையானது தற்போது 40 மில்லியன் சந்தாதாரர்களை எட்டி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்த நிலையிலேயே இந்த அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.
இப்படியான தருணத்தில் ஆப்பிள் மியூசிக் சேவை தொடர்ந்து வழங்குவதற்கு புதிய தலைவர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Oliver Schusser எனும் இவரின் தலைமையின் கீழ் Apple Music & International Content என்பன செயற்படவுள்ளன.
எவ்வாறெனினும் Spotify மியூசிக் சேவையானது உலகளவில் 70 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டு முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.