குருபெயர்ச்சி அதிசாரம்

Report Print Deepthi Deepthi in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasrimarket.com

17.1.2017 முதல் 10.3.2017 வரை

மேஷம்

உங்கள் ராசிநாதனாகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் குருபகவான் துலா ராசியிலிருந்து பலன் தரப்போவதால் உங்கள் செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். சகோதர உறவுகள் மூலம் மகிழ்ச்சியும், ஆதாயமும் உண்டு.

அஷ்டம சனியின் கெடுபலன்கள் குரு பார்வையால் நிவர்த்தியாகும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு சுபநேரம் வந்துள்ளது. ஆன்மிக விஷயத்தில்நாட்டம் அதிகரிக்கும். கோயில் திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

உத்யோக இடமாற்றம் காரணமாக தற்காலிகமாக குடும்பத்தை பிரிந்து இருக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளால் சில மனவருத்தங்கள் வரலாம்.

குரு 6ல் இருக்கும்போது வசூலாகாத பணம் வந்துசேரும். கருத்து வேறுபாடால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவார்கள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட தடை நீங்கிஒருமித்த கருத்து உண்டாகும். கலைத்துறையினருக்கு வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கும்; பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும்.

தொழில், வியாபாரம் சீராக இருக்கும் புதிய வியாபாரத் தொடர்புகள் உண்டாகும். உயர் பதவியிலிருக்கும் நண்பர் உதவுவார். சொந்த பந்தங்களின் குடும்ப விசேஷங்களால் பயணங்கள், மொய், பணம், பரிசுப் பொருட்கள் என்று செலவுகள் கூடும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடவும். ஏழை நோயாளிகளுக்கு மருந்து, சிகிச்சைக்கு உதவி செய்யலாம்.

ரிஷபம்

ராசிநாதனான சுக்கிரனின் வீட்டிற்கு குருபகவான் அதிசாரமாக வருவதால்வாய்ப்புகளைத் தவறவிட்ட நீங்கள் தற்போது சந்தர்ப்பங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வீர்கள்.

பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி பார்வையால் பல இன்னல்களை அனுபவித்த நீங்கள் அதிலிருந்து விடுபடுவீர்கள். பொருளாதார பிரச்னைகள் தீர்ந்து அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு உங்களுக்கு உதவுவார்கள்.

சொந்த பந்தங்களின் குடும்ப விஷயங்களில் பட்டும், படாமல் இருப்பது நல்லது. வெளிநாட்டில் வேலையில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம்.

பெண்கள் விலை உயர்ந்த வைர, நவரத்தின ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. எதிர்பார்த்தபடியே நல்ல குடும்பத்திலிருந்து படித்தபெண் உங்களுக்கு மருமகளாக வருவார். உத்யோகத்தில் சில மாற்றங்கள் வரலாம்.

மறைமுக நெருக்கடிகளுக்கும் இடமுண்டு. மனைவி வகையில் சொத்து சேரும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். கையில் காசு, பணம் புரளும். கான்ட்ராக்ட், டெண்டர் விஷயங்களில் யோசித்து செயல்படுங்கள். நண்பர்களால்சில வருத்தங்கள், வீண் செலவுகளுக்கு இடமுண்டு.

பரிகாரம்

சனிக்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு துளசிமாலை சாத்திவழிபடவும். உடல் ஊனமுற்றவர்களுக்கு ஆடை தானம் தரலாம்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு யோக ஸ்தானத்தில் குருபகவான் பிரவேசிக்கிறார்.தயக்கம், அவநம்பிக்கை நீங்கும். சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும்.

சமூகத்தில்உயர்பதவி, அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகமும் உதவியும் கிடைக்கும். தொடர்ந்து கிசிச்சை பெற்றவர்கள் நலம் பெறுவார்கள். மகனின் தொழில், வேலைவாய்ப்பு, திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமாக முடியும்.

குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று பிரார்த்தனைகளை செலுத்துவீர்கள். தந்தையுடனான மனக் கசப்புகள் மறையும்.

அவரிடமிருந்து பூர்வீக சொத்துகள் கிடைக்கும். குடும்பத்தாருடன் கலந்து பேசி முக்கிய முடிவுகளை எடுக்கவும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். சகோதர உறவுகளால் செலவுகள், அலைச்சல் இருக்கும்.

உத்யோகத்தில்சாதகமான காற்று வீசும், இழந்த நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். வழக்குகளில் விழிப்புடன் இருப்பது அவசியம். சிலர் உங்களுக்கு எதிராக காய் நகர்த்துவார்கள். கர்ப்பமாக இருப்பவர்கள் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பழைய வாகனத்தை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். வியாபாரம் சீராக இருக்கும். வேலையாட்களால் சில சங்கடங்கள் வந்து நீங்கும். புதிய கிளை தொடங்கும் நேரம் வந்துள்ளது.

பரிகாரம்

புதன்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வணங்கலாம். ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் ராமானுஜரை வழிபடலாம்.

கடகம்

ராசிக்கு சாதகமான நட்சத்திர சாரத்தில் சதுர்த்தகேந்திரத்தில்குருபகவான் நுழைவதால் எல்லாவிதமான தடங்கல்களும், மனக்கசப்புகளும் நீங்கும். விலகி நின்றசொந்தங்கள் நெருங்கி வந்து உறவாடுவார்கள்.

சொத்து விஷயமாக முக்கிய முடிவு எடுப்பீர்கள்.இருக்கும் நிலத்தை விற்று வேறு இடம் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகள் உங்களை புரிந்துகொண்டு ஒத்துழைப்பார்கள். குடும்பத்துடன் இஷ்ட தெய்வ ஆலயங்கள், பரிகார ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்புவரும். மாமியார் உடல்நலம் பாதிக்கப்படலாம்.

கடல் கடந்து செல்வதற்கான விசா கை வந்துசேரும். குடும்பப் பிரச்னை, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். மாணவர்கள் உயர்கல்வி பயில வாய்ப்பு கூடிவரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் அடிக்கடி ஏற்பட்ட மருத்துவ செலவுகள் கணிசமாகக் குறையும். இடமாற்றத்திற்கு வாய்ப்புண்டு. வசதியான பெரிய வீட்டிற்கு குடிபோவீர்கள்.

தாய்வழி உறவுகளால் அலைச்சல்,செலவுகள் இருக்கும். வியாபாரம் கை கொடுக்கும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் பிரியநேரலாம். அரசு கான்ட்ராக்ட் கிடைக்கும்.

பரிகாரம்

பிரதோஷத்தன்று சிவனுக்கு வில்வமாலையும், நந்திக்கு அறுகம்புல்மாலையும் சாத்தி வணங்கலாம். முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவிகள் செய்யலாம்.

சிம்மம்

ராசிக்கு திட தைரிய வீரிய ஸ்தானத்தில் குருபகவான் பிரவேசிப்பதால்பார்வை, பலம், நட்சத்திர சாரபலம் காரணமாக எந்த வேலையையும் உடனே செய்து முடிக்க ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப விஷயங்களை நெருங்கிய உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கணவன், மனைவி இடையே நல்ல உறவு இருக்கும். மனைவி வகையில் திடீர் பணவரவுக்கு இடமுண்டு. ராகுவால் ஏற்படும் சிக்கல்கள் குருபார்வையால் நிவர்த்தியாகும். நண்பர்கள், அவர்களுக்குதெரிந்தவர்கள் என்று யாருக்கும் ஜாமீன், மத்தியஸ்தம் என்று போகவேண்டாம்.

நான்கு சக்கரவாகனம் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறும். சகோதர உறவுகளால் அலைச்சல்,செலவுகள் உண்டாகும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டை காலி செய்ய வேண்டிய நிர்பந்தங்கள் வரலாம்.

மகளின் திருமண பேச்சு வார்த்தைகள் நல்ல முறையில் கைகூடி வரும். திருமணநாளை முடிவு செய்வீர்கள். தந்தையுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். சொத்து வகையில் நல்ல தகவல் வரும். உத்யோகத்தில் பதவி உயர்வுக்கு இடமுண்டு. தொழில், வியாபாரம் சூடுபிடிக்கும். பாக்கிகள் வசூலாகும். புதிய வியாபார தொடர்புகள் ஏற்படும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்

புதன்கிழமை சக்கரத்தாழ்வாருக்கு துளசிமாலை சாத்திவழிபடலாம். ஞாயிற்றுக்கிழமை பசுவிற்கு கோதுமையால் செய்த உணவு கொடுக்கலாம்.

கன்னி

ராசிக்கு குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்கிறார். இதனால் சாதக, பாதகங்கள் இருக்கும். அக்கம், பக்கத்தாரிடம் வீண் பேச்சு வேண்டாம். பயணத்தின்போது கவனம் தேவை. கைப்பொருள் இழப்பு ஏற்படலாம்.

பணப்புழக்கம், பணம் புரட்டுவதில் எந்த சிரமமும் இருக்காது. ஆனாலும் செலவுகள் இருந்துகொண்டே இருக்கும். விலை உயர்ந்த மின்னனு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி உடல்நலத்தில் கவனம் தேவை. கண் உபாதைகள் வரலாம். உத்யோகஸ்தர்களுக்குதற்காலிக இடமாற்றம் ஏற்படும். புதிய சொத்து வாங்குவதற்கான நேரம் இது.

பிள்ளைகளின் செயல்பாடுகளால் மனஅமைதி கெடும். சொந்த, பந்தங்களின் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிகார பதவியில்இருப்பவர்களால் அனுகூலம் உண்டு.

மாணவர்களுக்கு பாராட்டும், விருதும் கிடைக்கும். சகோதர உறவுகளிடையே சிறிய மனஸ்தாபம் வந்து நீங்கும். திடீர் வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்புள்ளது. வியாபாரம், தொழில் சாதகமாக இருக்கும். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் போடுவீர்கள்.வங்கியில் இருந்து உதவிகள் எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்

சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அறுகம்புல் சாத்தி வழிபடலாம். தொழுநோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள் செய்யலாம்.

துலாம்

ராசியிலேயே ஜென்ம குருவாக வந்து அமர்ந்துள்ளார். ஏற்கனவே சனிஇரண்டாம் வீட்டில் இருக்கிறார். ஆகையால் இனம்புரியாத கவலைகள் வந்து நீங்கும். கணவன்,மனைவியிடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும்.

புத்திர பாக்யம் எதிர்பார்த்தவர்களுக்கு இனிப்பான செய்தி உண்டு. வழக்குகள், பணப்பிரச்னை காரணமாக தடைப்பட்ட கட்டிட வேலைகள் மீண்டும் தொடங்கும். உடன்பிறந்தவர்களால் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் பெருமை கொள்வீர்கள். குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுப் பயணம் சென்று வருவீர்கள்.

எதிர்பார்த்த பதவி உயர் வுசற்று தாமதமாகும். தாயார் உடல் நலம் பாதிக்கப்படலாம். பெண்களுக்கு பிறந்த வீட்டிலிருந்துவரவேண்டிய சொத்து, பணம் வந்துசேரும். புதிய வேலையில் நல்ல சம்பளத்துடன் சேரும் காலம்இது.

நெருங்கிய உறவுகளின் சுப விஷேசங்களை தலைமையேற்று நடத்திக் கொடுப்பீர்கள். உடல்நலத்தில் உரிய கவனம் செலுத்தவும். கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் வேலைச் சுமையும், புதிய பொறுப்புகளும் கூடும். வியாபாரம், தொழிலில் உயர்வு உண்டு. கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை இருக்கும். வேலையாட்களால் நிம்மதி குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வந்துசேரும்.

பரிகாரம்

புதன்கிழமை தோறும் வராகி அம்மனை வழிபட்டு வரவும்.ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவலாம்.

விருச்சிகம்

ராசிக்கு விரய ஸ்தானத்தில் குரு பகவான் வந்து அமர்கிறார். ஆகையால்அவசர, அவசிய செலவுகள் ஏற்படும். தொடர் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைவார்கள்.தசாபுக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு சொந்த வீட்டில் குடிபுகும் பாக்யம் உண்டு. நெருங்கிய உறவுகளின் குடும்ப விஷயங்களில் அதிகம் தலையிட வேண்டாம்.

அலுவலகத்தில் திடீர் வெளியூர் மாற்றத்திற்கு இடமுண்டு, ஆகையால் குடும்பத்தை பிரிந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். சொத்து வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மிக தாகம் அதிகரிக்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

வராது என்று நினைத்திருந்த கைமாத்து பணம் திடீரென்று வசூலாகும். வீட்டில் பராமரிப்புச் செலவுகளுக்கு அதிகம் செலவு செய்ய நேரிடும். கலைத் துறையினருக்குகை நழுவிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

புதிய இரண்டு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். உயர் படிப்பு சம்பந்தமாக நுழைவுத் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சிபெறுவார்கள். மறைமுக, நேர்முக எதிர்ப்பு கள் விலகும். தொழில், வியாபாரம் சீராக நடக்கும்.கூட்டுத் தொழிலில் கால் பதிக்கும் யோகம் உண்டு.

பரிகாரம்

தினசரி கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். சஷ்டி விரதம்இருந்து முருகன் கோயிலுக்கு விளக்கேற்ற நெய் வாங்கித் தரலாம்.

தனுசு

ராசிநாதன் குருபகவான் லாப ஸ்தானத்தில் வந்து அமர்கிறார். தொட்டதுதுலங்கும், புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்ப்பு கள்நிறைவேறும். உயர்பதவியில் இருப்பவர் உறுதுணையாக இருப்பார்.

குழந்தை பாக்கியத்திற்காகஏங்கிய தம்பதிகளுக்கு அழகான வாரிசு உருவாகும். உடன் பிறந்தவர்களிடையே ஏற்பட்ட வருத்தங்கள்நீங்கும். அவசர தேவைக்காக வாங்கிய கடனை தீர்ப்பதற்கு புதிய வழி பிறக்கும். காது, தொண்டைசம்பந்தமாக உபாதைகள் வரலாம். தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

மாணவர்கள் உயர்கல்வி பயில கடல் கடந்து செல்லும் வாய்ப்பு உண்டு. அடிக்கடி செலவு வைத்துக் கொண்டிருந்தவாகனத்தை மாற்றுவீர்கள். மாமனாருக்கான மருத்துவச் செலவுகளுக்கு இடமுண்டு. நண்பர்களிடையேஅதிக நெருக்கம் வேண்டாம்.

உல்லாச பயணங்களையும் தவிர்த்து விடுங்கள். வழக்குகளில் சிக்கியவர்கள் அதிலே மிகவும் கவனமாக இருப்பது அவசியம். சிலர் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். மகளுக்குநல்ல இடத்திலிருந்து வரன் அமைவதற்கான காலம் இது. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய இருப்புகள் விற்றுத் தீரும். போட்டிகள் குறையும். சிலர் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுவார்கள்.

பரிகாரம்

சனிக்கிழமை காகத்திற்கு உணவிடவும். சனீஸ்வரருக்குவிளக்கேற்றி வழிபாடு செய்யவும். கிருத்திகை விரதம் இருந்து முருகனை வணங்கவும்.

மகரம்

ராசிக்கு தசம கேந்திர ஸ்தானத்தில் குருபகவான் நுழைகிறார். நட்சத்திரசாரம் சாதகமாக உள்ளது. இடமாற்றம் ஏற்படலாம். அது வீடு மாற்றம் அல்லது வெளியூர் மாற்றமாகக்கூட இருக்கலாம். விலகி நின்ற சொந்தங்கள் நெருங்கி வந்து உறவாடுவார்கள்.

பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல், செலவுகள் நீங்கும். மகனுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து வேலைக்கான அழைப்பு வரும். மாமனாரின் ஒத்துழைப்பும், பண உதவிகளும் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைச்சுமை இருக்கும்.

சிறிது குழப்பம், வெறுப்பு, சலிப்பு வந்து போகும். பயணத்தின்போது கவனம் தேவை. முடிந்தவரை இரவுப் பயணத்தை தவிர்த்திடுங்கள். நீண்ட நாட்களாக விற்கப்படாமல் இருந்த சொத்து விற்பனையாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

பெண்களுக்கு பிறந்த வீட்டிலிருந்து வரவேண்டிய தாய்வழி சொத்துகள் வந்து சேரும். தந்தை உடல் நலம் பாதிக்கும், மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும். மாணவர்களுக்கு பாராட்டும், பரிசும், உதவித் தொகையும் கிடைக்கும். சீமந்தம், காது குத்தல் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரம் ஏற்றமாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். புதிய முதலீடுகள் லாபம் தரும். வேலையாட்களிடம் அனுசரணையாக போகவும்.

பரிகாரம்

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு வில்வமாலை சாத்திவணங்கலாம். இல்லாதோர், இயலாதோர், பாரம் சுமப்போருக்கு உதவலாம்.

கும்பம்

ராசிக்கு குருபகவான் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்கிறார். இதனால் நல்ல விஷயங்கள் கூடிவரும். தந்தையிடமிருந்து உதவிகள் கிடைக்கும். சொந்த பந்தங்களிடையே இருந்த பகை, மனக்கசப்பு மறையும்.

உங்களை புரிந்து கொண்டு நேசக்கரம் நீட்டுவார்கள். மகன், மகள் திருமண விஷயமாக சுப பயணங்களும், பணம் பிரட்ட வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். நெருங்கிய நண்பர்களிடையே மன வருத்தமும் விரிசல்களும் வரும்.

உத்யோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பதவி உயர்வுக்கு வாய்ப்புண்டு, கௌரவ பதவிகள் தேடிவரும்.

பெண்களுக்கு இனம் புரியாத கவலைகள் நீங்கும். அதே நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிவரும். சொந்த ஊரில் உங்களுக்கு முக்கியத்துவம் கூடும். பொதுப் பணிகளைத் தலைமை ஏற்று நடத்துவீர்கள்.

மருமகள் மூலம் வாரிசு என்ற இனிக்கும் செய்தி உண்டு. பூர்வீக சொத்தில்உங்களுக்கு உரிய பங்குத் தொகை கிடைக்கும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தவர்கள்ஒன்று சேர்வார்கள். தொழில், வியாபாரம். லாபமாக இருக்கும். வங்கி உதவிகள் கிடைக்கும். புதிய தொழிலில் கால் பதிப்பதற்கான முயற்சிகள் பலன் தரும்.

பரிகாரம்

புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று வணங்கலாம். ஞாயிற்றுக்கிழமைராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடலாம்.

மீனம்

ராசிக்கு மறைவு ஸ்தானமான எட்டாம் இடத்தில் குருபகவான் வருகிறார். இதனால் படபடப்பு, அலைச்சல், வீண் செலவுகள், திடீர் பயணங்கள் இருக்கும். குருகேது பார்வையால் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

குலதெய்வ நேர்த்திக் கடன்களை செய்து முடிப்பீர்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் குணமடைந்து வீடு திரும்புவார்கள். நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். தனஸ்தான பலம் காரணமாக கொடுக்கல், வாங்கலில் நின்றுபோன பணம் வசூலாகும்.

உத்யோகத்தில் சாதகமான நிலை இருந்தாலும், திடீர் வெளியூர் மாற்றலுக்கு இடமுண்டு. கர்ப்பமாக இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். சகோதர உறவுகளிடையே அனுசரணையாகப் போவது நல்லது. பெண்களுக்கு பிறந்த வீட்டிலிருந்து உதவிகள் கிடைக்கும்.

வெள்ளி பொருட்கள், தங்க நகைகள் சேரும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். நண்பர்களால் அலைச்சலும், செலவுகளும் இருக்கும். பெண்களால் சில சங்கடங்கள் வர வாய்ப்புள்ளது. வியாபாரம் சீராக இருக்கும்.

வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். எதிர்பார்த்த டெண்டர், ஆர்டர் கிடைக்கும். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழ்நிலைகள் வரலாம்.

பரிகாரம்

பெளர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்ளலாம்.வியாழக்கிழமை நவகிரக வழிபாடு செய்யலாம். கொண்டைக் கடலை சுண்டல் செய்து பக்தர்களுக்கு வழங்கலாம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments