பணத்திற்காக இப்படி செய்யலாமா?: இணையத்தளத்தில் வெளியான சர்ச்சை விளம்பரம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் பணம் சம்பாதிக்க மர்ம நபர் ஒருவர் இணையத்தளத்தில் வெளியிட்ட வினோதமான விளம்பரம் ஒன்று பலரையும் வியக்க வைத்துள்ளது.

கனடா நாட்டை சேர்ந்த பிரபல பாடகரான ஜஸ்டின் பீபர் சில தினங்களுக்கு முன்னர் இசை நிகழ்ச்சிக்காக சுவிஸில் உள்ள பேர்ன் நகருக்கு வந்துள்ளார்.

இசை நிகழ்ச்சி முடிவு பெற்றதும் சுவிஸ் ரசிகர்களை சந்திப்பதற்காக சூரிச் நகருக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்குள்ள புல்வெளி ஒன்றில் ரசிகர்களுடன் ஜஸ்டின் பீபர் சில நிமிடங்கள் கால்பந்து விளையாடியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு பிறகு, இணையத்தளத்தில் வினோதமான விளம்பரம் ஒன்று வெளியானது.

அதில், ‘பிரபல பாடகரான ஜஸ்டின் பீபர் விளையாடிய நிலத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட புல் விற்பனைக்கு’ என தலைப்பு இடப்பட்டிருந்தது.

மேலும், ஜஸ்டினின் ரசிகர்கள் இந்த புல்லை 1,000 பிராங்க் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளிடப்பட்டிருந்தது.

இணையத்தளத்தில் வெளியான இந்த விளம்பரம் பலரையும் வியக்க வைத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பலர் விவாதத்தில் ஈடுப்பட சர்ச்சைக்குரிய அந்த விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இணையத்தள நிறுவனம் வெளியிட்ட தகவலில் ‘சர்ச்சைக்குரிய விளம்பரம் தங்களுடைய விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் அது உடனடியாக நீக்கப்பட்டது’ என விளக்கம் அளித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments