அமெரிக்கா, வட கொரியா விவகாரம்: சுவிஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Report Print Kalam Kalam in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இருநாடுகளுக்கு மத்தியில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை தவிர்க்க மத்தியஸ்தராக பேச்சுவார்த்தை நடத்த தயார் என சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா நேற்று 6வது அணுகுண்டு ஏவுகணை பரிசோதனையை செய்துள்ளது.

வட கொரியாவின் இந்நடவடிக்கைக்கு அமெரிக்கா, சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன.

இந்நிலையில், சுவிஸ் ஜனாதிபதியான Doris Leuthard இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, ‘அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்குள் அமைதி திரும்ப பேச்சு வார்த்தை தொடங்க சுவிஸ் தயாராக உள்ளது.

வட கொரியா மீது பொருளாதார தடையை விதிப்பதன் மூலம் வட கொரியா தனது அணுகுண்டு பரிசோதனைகளை நிறுத்தாது.

அமைதி பேச்சுவார்த்தை மூலம் தான் இவ்விவகாரத்திற்கு தீர்வு கொண்டு வர முடியும்.

வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். வட கொரியாவின் செயல்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்தால் மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.

தென் கொரியா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளின் எல்லையில் சுவிஸ் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் வட கொரியா அமைதியை விரும்பினால் இரு நாடுகளின் அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளேன் என Doris Leuthard அறிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்