குற்றவாளியை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸ்

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
139Shares
139Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் குற்றவாளிகளை பிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

கடந்த வாரம் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 5 மணியளவில் லுசர்னே ரயில் நிலையத்துக்கு வெளியே துயர சம்பவம் நடந்துள்ளது.

இளம்பெண்ணிடம் கொள்ளையடித்து இரண்டு இளைஞர்கள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.

குறித்த பெண்ணை தாக்கி விட்டு கிரெடிட் கார்டை திருடி சென்றுள்ளனர், ஒருவழியாக தப்பி வந்த பெண் அளித்த தகவலின் பேரில் லுசர்னே பொலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

அவர்கள் ஜேர்மன் மொழி பேசியதாகவும், 22 வயது இருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல்கள் ஏதும் தெரிந்தால் பொலிசாரை தொடர்புகொள்ளும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்