இளவரசர் ஹரியின் காதலி எடுத்த முடிவு

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

இளவரசர் ஹரியை திருமணம் செய்த பின்னர் நடிப்புக்கு முழுக்கு போடும் முடிவில் அவரின் காதலியும், நடிகையுமான மேகன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரியும், பிரபல அமெரிக்க நடிகையுமான மேகனும் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக காதலித்து வருகிறார்கள்.

தனது திருமணம் குறித்த அறிவிப்பை ஹரி எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹரியுடனான திருமணத்துக்கு பிறகு மேகன் தனது நடிப்பை விட்டு விட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேகன் தற்போது Suits என்ற புகழ்பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சியில் நடித்து வரும் நிலையில் அதன் படப்பிடிப்புக்கு சரியாக செல்வதில்லை.

இதன் காரணமாக விரைவில் ஹரியை அவர் கரம் பிடிக்கலாம் என Suits குழுவினர் கூறுகிறார்கள்.

மேலும், திருமணத்துக்குள் தான் ஒத்து கொண்ட தொலைகாட்சி தொடர்களில் நடித்து முடிக்கவும் மேகன் முடிவு செய்துள்ளார்.

தீவிர காதலில் இருவரும் ஈடுபட்டுள்ளதால் ஹரியுடன் இன்னும் அதிக நேரம் செலவழிக்க லண்டனிலேயே நிரந்தரமாக தங்க மேகன் நினைப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்