பிரித்தானியா மார்க்கெட்டில் கார் புகுந்து பயங்கர விபத்து

Report Print Basu in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் மக்கள் கூட்டம் நிறைந்த மார்க்கெட்டில் கார் ஒன்று புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பக்கிங்காம் நகரத்தின் மத்தியில் உள்ள மார்க்கெட்டிலே இவ்விபத்து நடந்துள்ளது. இதில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வௌயாகியுள்ளது.

விபத்துக்குள்ளான காரை வயதான பெண் ஓட்டி வந்ததாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக மார்க்கெட்க்குள் புகுந்து கடைகளை தகர்த்துக்கொண்டு சென்றுள்ளது.

இறுதியில் லொறியின் மேல் மோதி நின்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் மார்க்கெட்டிலிருந்த கடைகள் பல சேதமடைந்துள்ளது. விபத்தை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் காயமடைந்த இரண்டு பெண்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை குறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்