நீ ஊனமானவனா? கால் துண்டாக்கப்பட்ட ராணுவ வீரரை புண்படுத்திய அதிகாரிகள்

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

செயற்கை காலுடன் வாழ்ந்து வரும் ராணுவ வீரர் ரயிலில் ஏறுவதற்கு அதிகாரிகள் தடை போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Bootle நகரை சேர்ந்தவர் Andy Grant (28) ராணுவ வீரரான இவர் கடந்த 2009-ல் ஆப்கானிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் தனது வலது காலை இழந்தார்.

இதையடுத்து Andy-க்கு செயற்கை கால் பொருத்தப்பட்டது, ஒற்றை காலுடன் தடகள போட்டிகளில் அவர் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

இந்நிலையில் லண்டனின் Euston-லிருந்து Liverpool-க்கு ரயிலில் பயணம் செய்ய ரயில் நிலையத்துக்கு Andy வந்த நிலையில் தான் சாப்பிட்ட உணவகத்தில் தனது பையை தொலைத்துள்ளார்.

பைக்குள் பணமும், ஊனமுற்றோருக்கான சிறப்பு ரயில் டிக்கெட்டும் இருந்த நிலையில், Andy-ஐ ரயிலில் ஏற ரயில்வே நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

நிலைமையை எடுத்து கூறியும், தனது கால்களை காட்டியும் கூட Andy-க்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

டிக்கெட் வாங்க வேறு பணம் இல்லாத நிலையில் தவித்து கொண்டிருந்த Andy-க்கு அருகிலிருந்து அவரின் நண்பர் நினைவுக்கு வர அவரை அணுகி டிக்கெட் எடுத்து பின்னர் ரயில் பயணித்துள்ளார்.

இது குறித்து Andy கூறுகையில், நீ ஊனமானவனா என அதிகாரிகள் வேண்டுமென்றே என்னிடம் கேட்டனர், அவர்களின் இதயமில்லாத இந்த செயல் என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்