இளவரசரின் திருமணத்திற்காக அரச குடும்பம் விடுத்த உத்தரவு

Report Print Kabilan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமணத்தை முன்னிட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்ற வேண்டும் என அரச குடும்பத்தினர் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும், அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கலுக்கும் வரும் மே மாதம் 19ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் வைண்ட்ஸர் நகரத்தின் தெருக்களில் உள்ள பிச்சைக்காரர்களால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி, அரச குடும்பத்தினர் அவர்களை அந்நகரை விட்டு வெளியேற்ற வேண்டும் என அந்நகர பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அரச குடும்பத்தினரின் இந்த திடீர் உத்தரவினால் அந்நகரில் பிச்சை எடுப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் தெரசா மே கூறுகையில், அரச குடும்ப திருமணத்தின்போது பிச்சை எடுப்பவர்களை வெளியேற்றுவதற்கு பதிலாக தற்காலிக இடவசதி செய்து கொடுத்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்