சித்தப்பாவின் திருமணத்தில் கலக்கப்போகும் குட்டி இளவரசர் ஜார்ஜ், சார்லோட்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணத்தில் குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகிய இருவரும் பூங்கொத்துக்களோடு மணமகனுடன் சேர்ந்து தேவாலத்திற்கு வருவார்கள் என கூறப்படுகிறது..

அரச குடும்பத்து திருமணத்தின் போது, Page Boy ஆக யாரேனும் வருவார்கள். அதாவது, மாப்பிள்ளை வலம் வரும்போது அவர்களுடன் இவர்களும் சேர்ந்து வருவார்கள்.

மே 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஹரியின் திருமணத்தில் சித்தப்பாவுடன் சேர்ந்து குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் சார்லோட் ஆகிய இருவரும் பூங்கொத்துக்களோடு வருவார்கள் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சித்தி பிபா மிடில்டன் திருமணத்திலும் ஜார்ஜ், சார்லோட் தான் Page Boyஆக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்