150 பயணிகள் இருந்தும் விமானத்திற்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண்: நடந்தது என்ன?

Report Print Santhan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தும் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக விமானத்தின் கழிப்பறைக்குள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Dallas பகுதியிலிந்து Minneapolis பகுதிக்கு American Airlines பயணிகள் விமானம் ஒன்று கடந்த திங்கட்கிழமை 150-பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் டெக்சாஸ் மாகாணத்தின் Carrollton பகுதியைச் சேர்ந்த Theresa Hines (48) என்ற பெண்ணும் பயணித்துள்ளார்.

விமானம் Minneapolis-பகுதியில் உள்ள St Paul விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது வழக்கம் போல் பயணிகள் எண்ணப்பட்டுள்ளனர்.

ஒரு பயணி குறைந்துள்ளார், இதனால் விமான பணியாளர்கள் விமானத்தின் கழிப்பறையில் சோதனை செய்துள்ளனர்.

அப்போது Theresa Hines மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அவர் விமானத்தின் அவசர வழி வழியாக கீழே இறக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில், Theresa Hines மயங்கிய நிலையில் நிர்வாணமாக கிடந்தார்.

ஆனால் அவரை விமான நிலைய பணியாளர்கள் அப்படியே அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர் என்று கூறினார்.

ஆனால் இதற்கு விமான நிலையம் சார்பில் பதில் அளிக்கையில், நாங்கள் அவரை நிர்வாணமாக கொண்டு செல்லவில்லை. துணியை போர்த்தி தான் கொண்டு சென்றோம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் விமானத்தில் இறந்து கிடந்த Theresa Hines உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments