டிரம்ப் உடனான உறவை அம்பலப்படுத்தியே தீருவேன்: ஆபாச நடிகை திட்டவட்டம்

Report Print Harishan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து அவருடனான உறவை அம்பலப்படுத்தியே தீருவேன் என ஸ்டார்மி டேனியல்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ட்ரம்ப் பற்றிய எந்தவொரு தகவலையும் வெளியில் கூறாமல் இருக்க பிரபல ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு 1,30,000 டொலர் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தில் நடிகை மட்டுமே கையெழுத்திட்டுள்ளார், அதில் டிரம்பின் கையெழுத்து இல்லாததால் ‘இந்த ஒப்பந்தம் செல்லாதென’ நடிகை தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாகவும், டிரம்பிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாகவும் நடிகை தரப்பில் டிரம்ப் வழக்கறிஞருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகையின் இந்த குற்றச்சாட்டை வெள்ளை மாளிகை மற்றும் டிரம்ப் நிறுவனத்தார் மறுத்துள்ள நிலையில், நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் டிரம்புக்கு தெரியும் என தன் வழக்கில் நடிகை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நடிகையின் வாயை அடைக்க பணம் கொடுத்தது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என தேர்தல் ஆணையம் மற்றும் நீதித்துறைக்கு டிரம்ப் மீது புகார் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்