கூகுளின் மெசேஜ் ஆப் அபாயகரமானது: எச்சரிக்கை விடுக்கும் ஸ்னோடென்

Report Print Arbin Arbin in ஆப்ஸ்
கூகுளின் மெசேஜ் ஆப் அபாயகரமானது: எச்சரிக்கை விடுக்கும் ஸ்னோடென்

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள Allo ஆப் அபாயகரமானது என எட்வர்ட் ஸ்னோடென் எச்சரித்துள்ளார்.

WhatsApp, Facebook உள்ளிட்ட சமூக வலைதள ஆப்களுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் இரு ஆப்களை அறிமுகப்படுத்துகிறது.

WhatsApp போன்று text-based ஆப் Allo மற்றும் Skype போன்று வீடியோ அழைப்பு பேசும் வசதியுடன் Duo என இரு ஆப்களை அறிமுகம் செய்கிறது.

இதில், Allo ஆப்-இல் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக ஸ்னோடென் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க உளவு அமைப்பின் முன்னாள் பணியாளரான எட்வர்ட் ஸ்னோடென், அந்நிறுவனத்தின் பல்வேறு ஆவணங்களை வெளியிட்டதால் வெளியுலகிற்கு பரிச்சயம் ஆனார்.

end-to-end encryption எனும் பாதுகாப்பு அம்சத்தை Allo ஆப்-இல் கூகுள் நிறுவனம் இயல்பு நிலையிலே பொருத்த மறுப்பதால் திட்டமிட்டே பாதுகாப்பு குறைபாடு உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்னொடென் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

கூகுள் நிறுவன பொறியாளர் ஒருவர் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்ததாகவும், பின்னர் அவர் உடனடியாக அந்த ட்வீட்டை நீக்கிவிட்டதாகவும் ஸ்னோடென் கூறியுள்ளார்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments