வீடியோ சட்டிங் சாதனத்தை அறிமுகம் செய்ய பேஸ்புக் முயற்சி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
36Shares
36Shares
ibctamil.com

முதன் முறையாக ஹாட்வெயார் சாதனம் ஒன்றினை அறிமுகம் செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி வீடியோ சட்டிங் செய்யக்கூடிய விசேட சாதனம் ஒன்றினையே அறிமுகம் செய்யவுள்ளது, இதற்கு Portal எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இச் சாதனமானது அமேஷானின் Echo Show மற்றும் Google Assistant வசதிகள் உட்பட தொடுதிரை வசதியினையும் உள்ளடக்கியதாக அறிமுகமாகவுள்ளது.

மேலும் விரைவாக பேஸ்புக் கணக்கில் உள்நுழைவதற்காக ஒவ்வொருவரினதும் முகத்தினை அடையாளப் படுத்தக்கூடிய லென்ஸ் பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் Spotify மற்றும் Netflix ஆகிய சேவைகளும் இதில் தரப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்