வாட்ஸ் ஆப்பின் புதிய பதிப்பினை அப்டேட் செய்யப்போகின்றீர்களா? பாரிய ஆபத்து காத்திருக்கின்றது

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

வாட்ஸ் ஆப் ஆனது புதிய பதிப்பு ஒன்றினை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.

2.19.66 எனும் இப் பதிப்பில் பாரிய குறைபாடு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சட்களினூடாக பரிமாறப்பட்டு சேமிக்கப்பட்ட புகைப்படங்கள் தானாவே அழிக்கப்படுகின்றன.

எனினும் குழுச் சட்டிகளினூடாக பரிமாறப்பட்ட புகைப்படங்கள் எவையும் இவ்வாறு அழிபடவில்லை.

இப் பிரச்சினை தொடர்பில் பல பயனர்கள் புகார் அளித்திருந்தனர்.

இதனை அடுத்து குறித்த குறைபாடு நீக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் தெரிவித்திருந்தது.

ஆனாலும் சில பயனர்கள் தாம் தொடர்ந்தும் இப் பிரச்சினையை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers