ஆசியாவிலேயே அதிக வெப்ப நிலை கொண்ட ஏப்ரல் மாதம்

Report Print Balamanuvelan in ஆசியா
48Shares
48Shares
ibctamil.com

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம்தான் ஆசியாவிலேயே அதிக வெப்ப நிலை கொண்ட ஏப்ரல் மாதம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் Nawabshah மாகாணத்தில் இந்த வெப்ப நிலை பதிவானது. இது ஒரு வரலாற்று நிகழ்வு என சில வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்சின் வானிலை ஆய்வு மையத்தைச் சார்ந்த Etienne Kapikian என்பவர் இந்த ஏப்ரல் மாதம்தான் பாகிஸ்தானில் பதிவான, சொல்லப்போனால் ஆசியாவிலேயே அதிக வெப்ப நிலை கொண்ட ஏப்ரல் மாதம் என ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

வானிலை நிபுணரான Christopher Burt இதுதான் தற்காலத்தில் பதிவான நம்பத்தகுந்த அதிக வெப்ப நிலை கொண்ட ஏப்ரல் மாதம் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே Mexicoவின் Santa Rosaவில் 51C (123.8F) பதிவானதாக கூறப்படும் செய்தி குறித்துக் கேட்டபோது அது நம்பத்தகுந்ததல்ல என்று அவர் கூறினார்.

உலக வானிலை அமைப்பு பொதுவாக மாதாந்திர வெப்ப நிலை குறித்த தகவல்களை வெளியிடுவதில்லை என்றாலும் பாகிஸ்தானில் பதிவான அதிக வெப்ப நிலை கொண்ட ஏப்ரல் மாதம் இதுதான் என்பதை அது உறுதி செய்துள்ளது.

ஏப்ரல் மாதத்தின் கடைசி நாள்தான் வரலாற்றிலேயே அதிக வெப்ப நிலையான 50.2C பதிவான நாளாகும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அன்று பலர் வெப்பம் தாங்காமல் மயக்கமடைந்ததாகவும் வெப்பத்தைத் தணித்துக் கொள்வதற்காக கால்வாய் ஒன்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்