2018-ம் ஆண்டிற்கான அதிர்ஷ்ட நிறம்: எந்த ராசிக்காரருக்கு எந்த நிறம் அதிர்ஷ்டம்?

Report Print Printha in ஜோதிடம்
396Shares
396Shares
ibctamil.com

ஜோதிட ரீதியாக 2018-ம் ஆண்டிற்கு சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் ஊதா போன்றவை நல்ல நிறங்களாக கருதப்படுகிறது. அதிலும் எந்த ராசிக்காரருக்கு எந்த நிறம் அதிர்ஷ்டம் என்பது குறித்து காண்போம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் 2018-ம் ஆண்டு சிவப்பு நிறத்தைத் தவிர்த்து, அதிர்ஷ்டத்தை கொடுக்கும் வெள்ளை, எலுமிச்சை பச்சை அல்லது மரகத பச்சை போன்ற நிறங்களை பயன்படுத்துவது நல்லது.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் ஆப்பிள் பச்சை மற்றும் குங்கும சிவப்பு போன்ற நிறமுள்ள ஆடைகளை நல்ல நாட்களில் அணிந்தால், வாழ்வில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் காணலாம்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு 2018-வது வருடத்தில் வெள்ளை, வெளிரிய சாம்பல் போன்ற நிறங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். குறிப்பாக புதன் கிழமைகளில் பச்சை நிறங்களை உபயோகிப்பது நல்ல பலன் உண்டு.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு நீலம் மற்றும் சிவப்பு நிறங்கள் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதிலும் திங்கட் கிழமைகளில் வெள்ளை, கடல் பச்சை அல்லது வெளிரிய நீல நிறங்களை உபயோகிப்பது மிகவும் நல்லது.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு 2018-ம் ஆண்டு வெள்ளை மற்றும் கோல்டன் நிறங்கள் அதிர்ஷ்டம் வழங்கும். இருப்பினும் இவர்கள் காப்பர், வெளிரிய பச்சை மற்றும் வெள்ளை போன்ற நிறங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடியதாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு பச்சை, நீலம், போன்றவை அதிர்ஷ்ட நிறங்களாகும். நினைத்த காரியம் நடக்க வேண்டுமானால், புதன் கிழமைகளில் பச்சை நிற உடைகளை அணியலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் 2018-ம் ஆண்டில் வெள்ளை, பச்சை, நீலம் போன்ற நிறங்களைப் பயன்படுத்தினால், அனைத்து விடயங்களும் சாதகமாக இருக்கும். அதுவும் வெள்ளிக் கிழமைகளில் சந்தன நிறங்களைப் பயன்படுத்துவது மிகவும் அதிர்ஷ்டமாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கருப்பு அல்லது வெள்ளை அதிர்ஷ்ட நிறங்களாகும். எனவே நல்ல நாட்களில் இந்த நிற உடைகளை அணிவது மிகவும் நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு 2018-ம் ஆண்டு பச்சை, ஆரஞ்சு சிவப்பு போன்றவை அதிர்த்தை வழங்கக்கூடிய நிறங்களாகும். அதிலும் செவ்வாய் கிழமைகளில் மஞ்சள் நிறங்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு நீலம், பச்சை மற்றும் அன்னாசி போன்ற நிறங்கள் அதிர்ஷ்டத்தை அளிக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் கருப்பு நிற உடையை அணிவது மிகவும் அதிர்ஷ்டமாகும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு சிவப்பு, ஆப்பிள் பச்சை, ஸ்கை ப்ளூ போன்றவை அதிர்ஷ்ட நிறங்களாகும். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஊதா அல்லது மிட்நைட் ப்ளூ நிறமுள்ள உடை அணிவது மிகவும் நல்லது.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் 2018-ம் ஆண்டு அதிர்ஷ்டமானதாக இருக்க பச்சை நிறங்களைப் பயன்படுத்தலாம். அதிலும் ஒவ்வொரு வியாழக் கிழமை அன்றும் வெளிரிய மஞ்சள் நிறமுள்ள உடைகளை அணிவதால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்