சனிப்பெயர்ச்சிக்கு பின் இந்த ராசிக்கு மட்டும்! 100 சதவீதம் யோகம் உள்ளதாம்

Report Print Printha in ஜோதிடம்
830Shares
830Shares
ibctamil.com

சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம்.

எனவே நடந்துமுடிந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம், கடகம், சிம்மம், துலாம் ஆகிய நான்கு ராசிகளுக்குமே சனி பகவான் நன்மை மற்றும் யோகத்தை செய்ய உள்ளார்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து பத்து வருட காலத்திற்கு எந்த பாதகமும் இன்றி நன்மைகள் நடைபெறும். தேங்கியிருந்த சுபநிகழச்சிகள் நடக்கும். தொழிலை பொறுத்தவரை கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

இவர்களுக்கு வெளிநாடு வாய்ப்புகளும் தேடி வரும். ஆனால் உடல்நலம் மற்றும் முதலீடு செய்யும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பரிகாரம்

கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து செவ்வரளி பலர்களை முருகனுக்கு சாத்தி வழிபட்டு வரலாம்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சியானது அடுத்த 18 வருட காலத்திற்கு நல்ல பலன்களை தரக்கூடிய அமைப்பில் உள்ளது. இவர்களினால் குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

10 மாதத்திற்கு பின் குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வர உள்ளதால் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய மாற்றங்களை கொடுக்கும்.

ஆனால் உடல் ஆரோக்கியம் தொடர்பான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

பரிகாரம்

அபிராமி அந்தாதி தினமும் படித்து வரலாம். செவ்வாய் கிழமைகளில் அம்மன் கொவிலுக்கு சென்று தரிசனம் செய்து வரலாம்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்க உள்ளது. இவர்களுக்கு பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வாழ்க்கைத்துணை ஆகிய அனைவருமே ஆதரவாக இருப்பார்கள்.

மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட கால போராட்டத்திற்கு பின் அனைத்து விடயங்களுமே இவர்களுக்கு சாதகமாக அமையும்.

பரிகாரம்

ஆதித்த ஹிருதயம் படித்து வரலாம். பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்கு சென்று வரலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மனதில் இருந்த கஷ்டங்களை தீர்க்கும். சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் திட்டமிட்டபடி அமையும். அந்தஸ்து உயரும். புதிய முயற்சிகள் அனைத்தும் 100 சதவீதம் வெற்றியை கொடுக்கும். பதவி உயர்வு கிடைக்கும். அனைத்து விடயத்திலும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

பரிகாரம்

அபிராமி அந்தாதி தினமும் பாராயணம் செய்து வரலாம். அம்மன் கொவிலுக்கு சென்று தரிசனம் செய்து வரலாம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்