இந்த வார ராசிப்பலன்( பெப்ரவரி 17 முதல் 23 வரை) : 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகுது?

Report Print Kavitha in ஜோதிடம்

பெப்ரவரி 17 முதல் 23 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

மேஷம்

தலைமை தாங்கி துணிச்சலுடன் எதையும் செய்யும் ஆற்றல் பெற்ற மேஷ ராசியினரே இந்த வாரம் செலவு அதிகரிக்கும். அதே நேரத்தில் உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

அஷ்டமத்து சனியால் வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே சிற்சில பிரச்சினைகள் தலை தூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் ஏற்றமும், இறக்கமுமின்றி சுமூகமாக சென்று கொண்டிருக்கும். தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உன்னதமான வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும். வாய்ப்புகளைத் தவறாமல் பயன் படுத்திக் கொள்ளுங்கள். பெண்களுக்கு துணிச்சலுடன் எந்தக் காரியத்தையும் நடத்தி முடிப்பீர்கள்.

சில காரணங்களால் வெளியூர் பயணம் தடைபடலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்க கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

ரிஷபம்

வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் தன்மை உடைய ரிஷப ராசியினரே இந்த வாரம் திடீர் டென்ஷன் உண்டாகும்.

நண்பர்கள், உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது.

கணவன், மனைவி ஒற்றுமையாக இருந்து பிரச்சினைகளை களைவீர்கள். உறவினர்கள் இல்லத்திற்கு வந்து செல்வார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சுணக்கங்கள் மாறி நன்மை உண்டாகும். தேக்கமடைந்த பொருள்களை விற்றுத் தீர்க்கும் நிலை ஏற்படும்.

அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வாய்க்கும்.

பெண்களுக்கு திட்டமிட்டு காரியத்தை நடத்தினால் சுலபமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவுவதற்கு முயற்சி செய்வீர்கள். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தேவையானவை அனைத்தும் கிடைக்கப் பெறுவதால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: அம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

மிதுனம்

கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய மிதுன ராசியினரே, இந்த வாரம் மறைந்திருந்தாலும் இணைந்திருப்பதும் நட்பு இருப்பதும் உங்களுக்கு சாதகமான அமைப்பைக் காட்டுகிறது.

வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பார்ப்பதன் மூலம் பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். மாத இறுதியில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும்.

உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை. தொழிலில் இருந்த சிக்கல்கள் களையப் பெறுவீர்கள்.

கூட்டு தொழிலில் இருந்த பிரச்சினைகளும் முடிவுக்கு வரும். வாடிக்கையாளர்களிடம் இருந்த நற்பெயரை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை காரணமாக வெளியூர் செல்ல நேரலாம். ஊதிய உயர்வு கிடைக்கலாம்.

பெண்களுக்கு முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளை பேசுபவர்கள் இடத்தில் இருந்து விலகி விடுவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சை மீற மாட்டார்கள். மாணவர்களுக்கு நிகழ்ச்சிகளில் பங்கு பெற வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும். அதற்கு எப்பொழுதும் தயாராக இருப்பீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குழப்பம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

கடகம்

வாக்கு திறமையும் எளிதில் கோபம் அடையாத குணமும் கொண்ட கடக ராசியினரே இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.

எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம்.

எதிலும் கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பங்காளிகள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல அபிவிருத்தி உண்டாகும்.

முன்னேற்றமான பாதையை உங்களுக்கு பங்குதாரர்கள் காண்பிப்பார்கள்.

உணவு உண்ணக் கூட நேரமில்லாமல் ஓயாது உழைக்க வேண்டி வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் தங்கு தடையின்றி கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். பெண்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் பின்னடைவு ஏற்பட்டு பின்பு சரியாகும், தொய்வின்றி வேலைகளைச் செய்வீர்கள்.

மாணவர்களுக்கு எந்த காரியத்திலும் நிதானமாக முடிவுகளை எடுப்பது சிறந்தது. பெற்றோர்களின் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

பரிகாரம்: பைரவரை வணங்க திருமண தடை நீங்கும். செல்வம் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

சிம்மம்

வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று லட்சியத்து டன் இருக்கும் சிம்மராசியினரே நீங்கள் எதிலும் முதலாவதாக இருப்பீர்கள்.

இந்த வாரம் வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். பணவரத்து எதிர் பார்த்ததைவிட குறையும். நினைத்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை.

மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் உங்களை நாடி வரக் கூடும்.

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். தொழில் வியாபாரம் நல்ல படியாக நடைபெறும். தீவிர நடவடிக்கைகள் எடுத்து வெற்றி காண்பீர்கள். தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்களுக்கு திட்டமிட்டு படிப்பது சுலபமாக தெரியும். நண்பர்களுடம் வெளியில் செல்ல நேரலாம்.

பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமையில் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பமும் நீங்கும். மனநிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

கன்னி

சாதுர்யமாக பேசி சகல காரியங்களை யும் சாதிக்கும்திறமை உள்ள கன்னி ராசியினரே இந்த வாரம் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

நன்மை தீமை களை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியை சிலர் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு தெரிய வரும்.

பிள்ளைகள் உங்கள் மனதை புரிந்து நடந்து கொள்வார்கள். தொழில் சுமாராகவே நடைபெறும். சில வில்லங்கங்களை சமாளிக்க சட்ட பிரச்சினைகள் வரை செல்ல நேரிடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் சில வாக்கு வாதங்கள் ஏற்படலாம். கவனமாக செயலில் இறங்கவும்.

பெண்களுக்கு எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு பொது சிந்தனைகள் ஏற்படும். ஆசிரியர்கள் உங்களை பாராட்டுவார்கள். தீவிரமாக படிப்பீர்கள்.

பரிகாரம்: விநாயகருக்கு விளக்கேற்றி வழிபட கடன் பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

துலாம்

காந்தம் இழுப்பது போல் எவரையும் தம்பால் இழுத்துக்கொள்ளும் சக்தி படைத்த துலா ராசியினரே இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும்.

உடல் ஆரோக்யம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். அலைச்சல் இருக்கும். பணவரவும் இருப்பதுடன் பயணங்கள் செல்லவும் நேரலாம். குடும்பத்தில் முடிக்க முடியாத பிரச்சனைகளை சுலபமாக உங்களால் சமாளிக்க முடியும்.

சிலர் கூறுவதை தவிர்க்க முடியாமல் வேறு வழியின்றி ஆமோதிக்கக் கூடும், தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாக்கு வன்மையால் நல்ல சூழ்நிலை நிலவும்.

பிரச்சினைகள் அறவே நீங்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும். மாணவர்களுக்கு உயர்ந்த சிந்தனை ஏற்படும். அனைவரிடமும் பாராட்டு பெறும் வகையில் நடந்து கொள்வீர்கள். பரிசும் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயக பெருமானை 21 முறை வலம் வர வெற்றி உண்டாகும். நன்மைகள் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

விருச்சிகம்

திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவரான விருச்சிக ராசியினரே, இந்த காலகட்டத்தில் வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும்.

எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும்.

குடும்பத்தில் உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். அவர்கள் உங்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவுகளை எடுப்பார்கள். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகளால் மன அழுத்தம் உண்டாகும்.

அதை சமாளிக்க தேவையான நிதி உதவிகள் பெற பலரிடம் அலைய வேண்டியதிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களது திறமை வெளிப்படும். அனைவரும் மனமுவந்து பாராட்டு தருவார்கள்.

பெண்களுக்கு பிரயாணங்கள் செய்ய வேண்டி வரலாம். எந்தக் காரியங்கள் செய்யும் போது யோசித்து செய்யவும். மாணவர்களுக்கு முன்னேற்றமான கால கட்டமாக அமையும். தீவிரமாக முயற்சி செய்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: பெருமாளுக்கு வெண் தாமரையால் அர்ச்சனை செய்து மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

தனுசு

தொலை நோக்கு பார்வையும் உயர்ந்த எண்ணங்களும் உடைய தனுசு ராசியினரே நீங்கள் எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இந்த வாரம் ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பாடுபட வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும்.

கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும்.

தொழில் வியாபாரத்தில் திடீர் பண வரவு இருக்கும். நீங்கள் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து பண வரவுகள் இருக்கும். அது உங்களுக்கு ஆச்சரியைத் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இரவு - பகல் பாராமல் உழைக்க வேண்டி இருக்கும். கவலை தோய்ந்த முகத்துடன் காணப் படுவீர்கள். பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மறையும். ஓயாமல் குடும்பத்திற்காக உழைக்க வேண்டி வரலாம் மாணவர்களுக்கு பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது சிறந்தது.

பரிகாரம்: அம்பாளுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து ஆராதனை செய்யுங்கள். வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்,

மகரம்

சொந்த உழைப்பினால் உயரும் திறமை உடைய மகர ராசியினரே, உங்க ளுக்கு பிறரின் உதவிகள் கிடைக்கும். இந்த வாரம் செய்வது ஆக்கபூர்வமான யோசனை களைதரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர் கள்.

சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங் களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்து செல்வது உங்கள் வெற்றிக்கு உதவும்.

தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையை எதிர்பார்க்கலாம். சிறு வியாபாரிகள் கூட லாபத்தை அடைவார்கள்.

எதிர்பாராத பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிது முன்னேற்றத்தை அலுவலகத்தில் எதிர்பார்க்கலாம். திடீர் வேலை மாற்றம் ஏற்படலாம். பெண்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை பேசிவிட நேரலாம்.

அமைதியாக இருங்கள். தியானம் செய்யுங்கள். மாணவர்களுக்கு சிறப்பான பாராட்டையும், உதவியையும் பெறக் கூடியசூழ்நிலைகள் உள்ளன. தீவிரமாக பாடங்களும் படிப்பீர்கள்.

பரிகாரம்: அம்மன் வழிபாடு வெற்றியை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

கும்பம்

மனத்துணிவும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் அதிகம் பெற்ற கும்பராசியினரே, இந்த வாரம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும்.

நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்களுடன் சுமுக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து விடும். தடைகள் பல கடந்து செயல் முறையில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும்.

பெண்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் குடும்பத்தில் ஏற்படும். மனதில் அமைதி இருக்காது. மாணவர்களுக்கு மன வலிமை ஏற்படும். ஆசிரியர்களின் பாராட்டையும், நட்பையும் பெறுவீர்கள். சக மாணவர்களிடம் பழகும் போது கவனம் தேவை.

பரிகாரம்: சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள்சாதம் வைப்பது உடல் ஆரோக்கியத்தை தரும். கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

மீனம்

சிக்கனம் வீட்டை காக்கும் என்பதை நன்கு உணர்ந்து எதிலும் ஆடம்பரம் காட்டாமல் அமைதியாக இருக்கும் மீன ராசியினரே, இந்த வாரம் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும்.

அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இசை நாட்டியம் போன்ற கலைகளில் ஆர்வம் பிறக்கும். வீண் ஆசைகள் தோன்றலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

தொழிலாளர்களுக்கு ஏற்படும் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பீர்கள். தொழிலில் லாபத்தில் குறைவிராது. உத்தியோகஸ்தர்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் கூட மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தலாம். கவனமாக இருக்கவும்.

பெண்களுக்கு உடல்நிலை சற்று தடுமாறலாம். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இடுப்பு, கை, கால் போன்ற உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்