டிசம்பர் மாத சந்திராஷ்டம நாட்கள் : எந்த ராசிக்காரர்களை வாட்டி வதைக்க போகுது தெரியுமா?

Report Print Kavitha in ஜோதிடம்
1196Shares

டிசம்பர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று பார்க்கலாம்.

மேஷம்

12.12.2020 இரவு 10.41 மணி முதல் 14.12.2020 இரவு 11.26 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.

வாகனங்களில் போகும் போது அதி வேகத்தை தவிர்க்கவும். மிளகு பனங்கல்கண்டு பாலில் கலந்து சாப்பிட்டு விட்டு வேலைகளை தொடரலாம்.

ரிஷபம்

14.12.2020 இரவு 11.26 மணி முதல் 17.12.2020 நள்ளிரவு 01.47 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.

வாகனங்களில் போகும் போது அதி வேகத்தை தவிர்க்கவும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். வெல்லம் அல்லது பனங்கல்கண்டு சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடரலாம். பால் கோவா, பாலில் செய்த இனிப்புகள் சாப்பிடலாம்.

மிதுனம்

17.12.2020 நள்ளிரவு 01.47 மணி முதல் 19.12.2020 காலை 07.16 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் கவனம் தேவை.

பேச்சில் கோபம் வேண்டாம், வீண் விதண்டாவாதங்களை தவிர்க்கவும். நாட்டுச்சர்க்கரை கலந்த பால் சாப்பிட்டு விட்டு பணியை தொடரலாம்.

கடகம்

19.12.2020 காலை 07.16 மணி முதல் 21.12.2020 மாலை 04.29 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் கவனம் தேவை.

பேச்சில் கோபம் வேண்டாம், வீண் விதண்டாவாதங்களை தவிர்க்கவும். நாட்டுச்சர்க்கரை கலந்த பால் சாப்பிட்டு விட்டு பணியை தொடரலாம். பால் பனங்கல்கண்டு சேர்த்து பொங்கல் செய்து சாப்பிடலாம்.

சிம்மம்

21.12.2020 மாலை 04.29 மணி முதல் 24.12.2020 அதிகாலை 04.32 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் கவனம் தேவை.

பேச்சில் கோபம் வேண்டாம், பாலில் தேன் கலந்து சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடருங்கள். வாகனங்களில் போகும் போது நிதானம் அவசியம்.

கன்னி

24.12.2020 அதிகாலை 04.32 மணி முதல் 26.12.2020 மாலை 5.18 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் கவனம் தேவை.

பேச்சில் கோபம் வேண்டாம், பால்கோவா சாப்பிட்டு விட்டு கலந்து சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடருங்கள். வாகனங்களில் போகும் போது நிதானம் அவசியம்.

துலாம்

26.12.2020 மாலை 5.18 மணி முதல் 29.12.2020 அதிகாலை 4.39 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.

பொறுமை அவசியம் முதலீடுகள் தவிர்க்கவும். பயணம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் பாலில் செய்த இனிப்பு சாப்பிட்டு விட்டு பயணம் தொடரவும்.

விருச்சிகம்

29.12.2020 அதிகாலை 4.39 மணி முதல் 31.12.2020 பிற்பகல் 1.38 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது.

பயணங்கள் தவிர்க்கவும் உணவு விசயத்திலும் பணம் கொடுக்கல் வாங்கல் விசயங்களிலும் நிதானம் பொறுமை அவசியம். வெல்லம் சேர்த்த பால் பொருட்கள் சாப்பிடவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

தனுசு

04.12.2020 காலை 7.22 மணி முதல் 06.12.2020 பிற்பகல் 02.46 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. 31.12.2020 பிற்பகல் 1.36 மணி முதல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. பாலில் செய்த இனிப்புகள் செய்து சாப்பிடவும்.

மகரம்

06.12.2020 பிற்பகல் 02.46 மணி முதல் 08.12.2020 இரவு 07.31 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. நாட்டுச்சர்க்கரை சேர்த்த பால் சேர்த்து சாப்பிடவும். பயணங்களில் நிதானம் அவசியம். மவுன விரதம் இருக்கவும்.

கும்பம்

08.12.2020 இரவு 07.31 மணி முதல் 10.12.2020 இரவு 09.52 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. பாலில் தேன் கலந்து சாப்பிடவும்.

பேச்சில் நிதானம் தேவை. பாலில் செய்த இனிப்பு பொருட்கள் சாப்பிடவும். பயணங்களில் கவனம் தேவை.

மீனம்

10.12.2020 இரவு 09.52 மணி முதல் 12.12.2020 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் செய்யும் செயல்களில் கவனமும் நிதானமும் தேவை.

பச்சரிசியில் சர்க்கரை பொங்கல் கலந்து சாப்பிடவும். முதலீடுகள் தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்