மகன் பட்ட துயரம் யாருக்கும் வேண்டாம்... குவிந்த ரூ.34 கோடி நிதியை தொண்டு நிறுவனத்துக்கு அளித்த தாயார்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

கிண்டல் செய்கிறார்கள், சாகவேண்டும் என அழுத அவுஸ்திரேலிய சிறுவனுக்காக குவிந்த நிதியை, அவனது தாயார் தொண்டு நிறுவனத்திற்கு அளித்து நெகிழ வைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குள்ளமாக இருப்பதால், எல்லோரும் கிண்டல் செய்கிறார் எனக் கூறி தன்னைக் கொன்றுவிட 9 வயது சிறுவன் குவாடன் பேலஸ் பெற்றோரிடம் முறையிட்டிருந்தான்.

சிறுவன் குவாடன் பேலஸ் கண்ணீர் விட்டு அழுத காட்சியை அவரின் தாயார் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் குவாடன் பேலஸுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து உதவிகளும், நிதியும் குவியத் தொடங்கின.

குவிந்த ரூ.34 கோடி நிதியை (4.75 லட்சம் டொலர்) தற்போது குவாடன் பேல்ஸ் குடும்பம் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த யாரகா பேல்ஸின் 9 வயது மகன் குவாடன்.

சிறுவன் குவாடன் குள்ளமாக இருப்பதால் வகுப்பில் சக மாணவர்கள் அவனை ஏளனம் செய்தும் துன்புறுத்தியும் வந்துள்ளனர்.

கடந்த வாரம் பாடசாலையில் இருந்து குவாடனை அவரின் தாயார் காரில் அழைத்து வந்தார். அப்போது காரில் அமர்ந்து கொண்டு சிறுவன் குவாடன் கண்ணீர் விட்டு அழும் காட்சியை வீடியோவாக சமூக வலைதளத்தில் அவரது தாயார் வெளியிட்டிருந்தார்.

குவாடனின் வீடியோவை அவனது தாயார் பகிர்ந்து கொண்ட பிறகு அச்சிறுவனுக்கு ஆதரவு பெருகியது.

சிறுவன் குவாடன் கண்ணீர் விட்டு அழும் வீடியோவைப் பார்த்து ஹாலிவுட் நடிகர் ஹக் ஜேக்மான், கூடைப்பந்து வீரர் எனிஸ் கான்டர் ஆகியோர் ஆதரவு அளித்து தனியாக நிதி திரட்டத் தொடங்கினர்.

இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் பிராட் வில்லியம்ஸ் , சிறுவன் குவாடன் பேலஸுக்கு தனியாக GoFundMe எனும் பக்கத்தை உருவாக்கி நிதி திரட்டத் தொடங்கினார்.

அந்த வகையில் சிறுவன் குவாடன் நிலையைப் பார்த்த ஏராளமானோர் நிதியளித்த வகையில் 4.75 லட்சம் டொலர் (ரூ.34 கோடி ) நிதி சேர்ந்தது.

இந்த நிதியை ஹாலிவுட் நடிகர் பிராட் வில்லியம்ஸ், சிறுவன் குவாடன் பேலஸுக்கு அனுப்பி வைத்தார்.

சிறுவன் குவாடன் பேலஸ் நீண்ட நாட்களாக அமெரிக்காவின் டிஸ்னி லாண்டுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டதால், அந்தப் பணத்தை அதற்குச் செலவிடுங்கள். அவன் ஆசையை நிறைவேற்றுங்கள் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த உதவிக்கு நன்றி தெரிவித்துள்ள குவாடனின் தாயார், என் மகனைப் போன்ற வாழ்க்கையை யாரேனும் வாழ்ந்திருந்தால்,

யாரும் டிஸ்னிலேண்டுக்குச் செல்ல விரும்பமாட்டார்கள். அவனின் அன்றாட வாழ்வில் அவன் எதிர்கொண்ட சவால்களை விளையாட்டு என எதிர்கொண்டு எங்கும் தப்பித்திருக்க முடியாது. யாரும் அதுபோல் வாழக்கூடாது.

நாங்கள் இந்தப் பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்போகிறோம். அவர்களுக்குத்தான் இந்தப் பணம் தேவைப்படுகிறது.

அவர்களுக்குத்தான் இந்தப் பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்பது தெரியும். நாங்கள் டிஸ்னிலேண்டுக்குச் செல்வதைக் காட்டிலும், இந்தப் பணத்தில் சமூகத்தில் உள்ள குழந்தைகள் பயன்பெறுவதுதான் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்