அவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதி ஒருவரைத் தாக்க முயன்ற ஒருவர் அவரைத் தாக்க முடியாததால் அவர் முகத்தில் துப்பும் காட்சி CCTV கமெராவில் பதிவாகியுள்ளது.
கிழக்கு மெல்போர்னில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் ஒரு பயணி, சாரதிக்கும் பயணிகளுக்கும் குறுக்கே வைக்கப்பட்டுள்ள தடுப்பையும் தாண்டி சாரதியை தாக்க முயன்றுள்ளார்.
ஆனால் அவரால் சாரதியை எட்ட முடியவில்லை, ஆகவே அவர் சாரதியின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளார்.
இந்த காட்சி பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளது. பேருந்த சாரதி நிறுத்தியதும், அந்த நபர் பேருந்திலிருந்து இறங்கி தப்பிவிட்டார்.
அவர் எதற்காக சாரதியை தாக்க முயன்றார் என்பது தெரியவில்லை. CCTV கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் அந்த நபரை தேடி வருகிறார்கள்.